"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
24/5/17

சர்வதேச அளவில் தீவிரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும் என ஈரான் நாட்டிற்கு அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து முதன் முதலாக வெளிநாட்டு பயணமாக டிரம்ப் சவுதி அரேபியா பயணமானார்.

சவுதியில் நேற்று பயணத்தை முடித்துக்கொண்ட டிரம்ப் இரண்டு நாள் பயணமாக தற்போது இஸ்ரேல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இஸ்ரேல் நாட்டின் ஜனாதிபதியான Reuven Rivlin என்பவரை சந்தித்து டிரம்ப் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டுள்ளார்.

அப்போது தீவிரவாதத்தை அழிக்க இஸ்லாமிய நாடுகள் முன் வந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஈரான் நாட்டின் நடவடிக்கைகள் சர்வதேச அளவில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. எந்த சூழ்நிலையிலும் தீவிரவாதிகளுக்கும் கிளிர்ச்சியாளர்களுக்கும் ஈரான் ஆதரவு அளிக்க கூடாது.

சிரியா ஜனாதிபதிக்கு ஆதரவு அளிப்பது ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளிப்பது மற்றும் லெபனான் நாட்டில் சட்டவிரோதமாக இயங்கி வரும் Hezbollah Shia கட்சிக்கு ஈரான் ஆதரவு அளிப்பதால் மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் ஆபத்தில் தத்தளித்து வருகின்றன.

ஈரான் நாடு தீவிரவாதத்திற்கு ஆதரவு தருவதை நிறுத்திக்கொள்வதுடன் அணு ஆயுதங்களை வைத்துக்கொள்ளும் கூடாது. இதனை அமெரிக்கா-இஸ்ரேல் ஒருபோதும் அனுமதிக்காது என டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.