"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
25/5/17

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் ஆட்சியமைத்த உற்சாகத்தில், மற்ற மாநிலங்களிலும் ஆட்சியமைக்கும் முனைப்பில் இருக்கிறது பி.ஜே.பி. இந்நிலையில், பி.ஜே.பி-யின் தேசியத் தலைவர் அமித் ஷா, மூன்று நாள் பயணமாக தெலங்கானா சென்றார். அப்போது, 'பி.ஜே.பி நிர்வாகிகளின் சிறப்பான பணியால், விரைவில் இங்கு ஆட்சியமைப்போம்' என்று கூறினார்.

மேலும், 'மத்திய அரசு தெலங்கானாவுக்கு அதிக நிதி வழங்கிவருகிறது. இதுவரை, சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கூடுதலாக ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுவருகிறது' என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பேசும்போது, 'ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக வழங்குவதாக, அமித்ஷா கூறியுள்ளார். நான் அவருக்குச் சவால் விடுகிறேன். ஆண்டுக்கு 200 ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டதை அவர் காட்டட்டும். அப்பட்டமாகப் பொய் கூறிவருகிறார். இதற்கு, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்றார்.

'தெலங்கானா சுற்றுப்பயணத்தின்போது, அமித் ஷா தலித் காலனிகளுக்குச் சென்றார். அங்கு அவர், வெளியிடங்களில் சமைக்கப்பட்ட உணவைத்தான் வாங்கிவந்து சாப்பிட்டுள்ளார்' என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, 'மற்ற அரசுகளைவிட, மோடி அரசுதான் தெலங்கானாவுக்குக் கூடுதல் நிதி வழங்கியுள்ளது' என்று அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில், சந்திரசேகர் ராவின் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி, பி.ஜே.பி-க்கு ஆதரவு அளிப்பதாக முன் தகவல் வெளியாகியது. ஆனால், தற்போது, குடியரசுத் தலைவர் தேர்தலில் பி.ஜே.பி-யை ஆதரிப்பதுகுறித்து, இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார். இது, பி.ஜே.பி வட்டாரத்தில் மேலும் புகைச்சலைக் கிளப்பியுள்ளது. 

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.