Mohamed Farook Mohamed Farook Author
Title: நீ படிக்க லாயக்கே இல்லை! சொல்கிறார்களா? – இதைக் கொஞ்ச படிங்க‌!!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
வாழ்வில் முன்னேற கடின உழைப்பு மட்டுமின்றி சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி எடுக்கும் முடிவுகளும் முக்கியம் என்பதை உணர்த்தும் சம்பவம். ஒரு ...
வாழ்வில் முன்னேற கடின உழைப்பு மட்டுமின்றி சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி எடுக்கும் முடிவுகளும் முக்கியம் என்பதை உணர்த்தும் சம்பவம்.

ஒரு மாணவன் முழு ஆண்டுத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் ஃபெயில், தலைமை ஆசிரியருக்குக் கோபம் வந்து விட்டது. “இப்பள்ளியில் பத்து வருஷமாப் படிச்சிரு க்கே; ஒரு பாடத்துல கூட பாஸாகலை. வகுப்புல பாடம் நடத்தும்போது நீ என்ன காதுல பஞ்சு வெச்சு அடைச்சு கிட்டிருந்தியா? ன்னு கோபாமாக திட்டினார்.
அந்தப் பையன் அமைதியாக நின்றிருந்தான். “இனி நீ படிக்க லாயக்கே இல்லை என்று டி.ஸி. கொடுத்து அனுப்பி விட்டார்.
அந்தப்ப பையன் தெருவில் இறங்கி நடந்தான். “உன் காதில் என்ன பஞ்சா அடைத்து வெச்சிருக்கே? என்ற அந்த வார்த்தை காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. உடனே தன் காதுகள் இரண்டையும் நன்றாக முடினான். அமைதியான அந்த உலகம் அவனுக்கு வித்தியாசமாகத் தெரிந்தது. 
ஒரு புதிய சிந்தனை உருவானது. தலைமையா சிரியர் சொன்னது போல் பஞ்சு வைத்து காதை அடைத்துப் பார்த்தான். ஒரு புது சாதனத்தை வடிவமைத்தான். அதன் பெயர் இயர் மஃப்
பரீட்சைக்குப்படிக்கிறவர்கள் தொந்தரவின்றிப் படிக்க வாங்கினார்கள். இரைச்சலான இடங்களில் வேலை செய்பவர்கள் வாங்கினார்கள். ஓரளவுக்கு வியாபார ம் நடந்தது.
அச்சமயம் முதல் உலகப்போர் ஆரம்பமானது. பீரங்கிச் சத்தத்தினால் காது செவிடாகாமல் தடுக்க இயர்மஃப் கட்டாயம் அணிய வேணடும் என அதிகாரி உத்தரவிட்டார். போர்வீரர்களுக்கு வசதியாக ஹெல்மட்டில் அமைத்து கொடுத்தான். கோடீஸ்வரனானார். 
 
அவர்தான் செஸ்டர் கீரின்வுட். சங்கடமான சூழ்நிலையில் கிடைத்த ஐடியாவை சரியானமுறையில் பயன்படுத்தியதால் முன்னேறினார்.
ஆகவே உங்களை யாராவது இனி நீ படிக்க லாயக்கே இல்லை என்று சொன்னால், ஆமா நான் படிக்க லாயக்கில்லை ஆனால் சாதிக்க‍ லாயக்கு, என்று சொல்லிவிட்டு, சமயோசிதமாக செயல் பட்டு வாழ்க்கையில் முன்னேறுங்கள்......................................................

வாழ்த்துக்களுடன் - வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top