Mohammed Farook Mohammed Farook Author
Title: தீவிரவாதத்துக்கு எதிரான தாக்குதலை இஸ்லாமிய நாடுகளுக்கு எதிரானதாக பார்க்கக்கூடாது - டிரம்ப்
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
சவுதி அரேபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அங்கு நடைபெற்ற மாநாட்டில் பல முக்கிய விடயங்கள் குறித்து பேசியுள்ள...
சவுதி அரேபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அங்கு நடைபெற்ற மாநாட்டில் பல முக்கிய விடயங்கள் குறித்து பேசியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியான பின்னர் டொனால்டு டிரம்ப் முதல் வெளிநாடு பயணமாக சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார்.அங்கு நடைபெற்ற அரேப் – இஸ்லாம் – அமெரிக்க கூட்டமைப்பு மாநாட்டில் பேசிய டிரம்ப் எந்த ஒரு நாடும் தீவிரவாத குழுக்களுக்கு இருப்பிடமாக செயல்படக் கூடாது என்று தெரிவித்தார்.

மேலும் எந்தவொரு நாடும் தீவிரவாதத்தை வளரவிடவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என டிரம்ப் கூறியுள்ளார். தீவிரவாதத்துக்கு எதிராக நடைபெறும் தாக்குதல் என்பது நன்மைக்கும் தீமைக்கும் இடையில் நடைபெறும் போர் என்று கூறிய டிரம்ப் அதனை மேற்கு உலக நாடுகளுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையில் நடைபெறும் போராக பார்க்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய நாடுகளுக்கு டிரம்ப் எதிரானவர் என கூறப்பட்டு வரும் நிலையில் தனது முதல் பயணமாக இஸ்லாமிய நாடான சவுதிக்கு சென்று டிரம்ப் உரையாற்றியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top