Mohamed Farook Mohamed Farook Author
Title: தோற்றத்தை வைத்து மட்டுமே மதிப்பது என்பது எப்போதும் தவறான ஒன்றாகும்.
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
அவலட்சணமான தோற்றம் கொண்டதால் விற்பனையாளர்களால் புறக்கணிக்கப்பட்ட முதியவர் ஒருவர் ரொக்கமாக பணம் செலுத்தி ஹார்லி டேவிட்சன் பைக்கை வாங்கி ...
அவலட்சணமான தோற்றம் கொண்டதால் விற்பனையாளர்களால் புறக்கணிக்கப்பட்ட முதியவர் ஒருவர் ரொக்கமாக பணம் செலுத்தி ஹார்லி டேவிட்சன் பைக்கை வாங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார். செல்லும் இடத்திற்கு தகுந்த உடை தோற்றம் இருக்க வேண்டும் என்பார்கள்.. அப்படி இல்லாமல் செல்பவர்கள் எந்த அளவுக்கு மதிக்கப்படுவார்கள் என்பது அனுபவித்தவர்களுக்கே புரியும்.

ஆனால் ஒரு மனிதனை தோற்றத்தை வைத்து மட்டுமே மதிப்பது என்பது எப்போதும் தவறான ஒன்றாகும். தோற்றத்தை மட்டுமே வைத்து மதிப்பிடுவது எந்த அளவுக்கு அபத்தமானது என்பதனை சமீபத்திய இந்த நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கிறது.

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த லங் டேச்சா (Lung Decha) என்ற முதியவர் ஒருவர் ஹார்லி டேவிட்சன் பைக் வாங்க ஆசைப்பட்டுள்ளார். இதற்காக ஹார்லி பைக் ஷோரூமுக்கு சென்ற லங் டேச்சா ஆளுக்கு சற்றும் பொருந்தாத பெரிய நைந்துபோன டி-சர்ட் கிழிசலான அழுக்கு பேண்ட் சாதாரண செருப்புகள் சரியாக சீவப்படாத நீண்ட முடி என அவலட்சணமான தோற்றத்தில் சென்றுள்ளார்.

ஹார்லி டேவிட்சன் என்பது மிகவும் விலை மதிப்பு வாய்ந்த ஒரு பிராண்டு என்பது அனைவரும் அறிந்ததே. இந்த பைக்குகளின் ஆரம்ப விலையே சில லட்சங்களாக உள்ளது.பணக்காரர்கள் மட்டுமே வாங்கக்கூடிய இந்த பைக்கை அவலட்சணமான இந்த முதியவரா வாங்கிவிட போகிறார் என்று ஷோரூம் ஊழியர்கள் இவரை அலட்சியப்படுத்தியுள்ளனர். அது மட்டுமல்லாமல் பார்க்கவே மிகவும் ஏழ்மையாகவும் அவலட்சணமாகவும் இருந்ததால் ஷோரூம் விற்பனை பிரதிநிதிகள் இந்த முதியவரை மனிதராகக் கூட மதிக்காமல் புறக்கணித்துள்ளனர்.

ஷோரூம்களில் மதிப்பு கொடுக்காததால் இவரும் மணம் தளராமல் ஒவ்வொரு ஷோரூமாக சென்றுள்ளார். இறுதியில் ஒரு ஷோரூமில் விற்பனை பிரதிநிதிகள் இவரின் தோற்றத்தைப் பற்றி கண்டுகொள்ளாமல் இதர வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்துடன் உபசரித்துள்ளனர். தான் வாங்க விரும்பிய ஹார்லி டேவிட்சன் பைக் மாடலை தேர்ந்தெடுத்து அதன் முகப்பு முதல் அடி வரையிலும் பார்த்து சோதித்துள்ளார்.

அதிகம் இல்லை வெறும் 10 நிமிடங்களில் தான் விரும்பிய விலையுயர்ந்த ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிளை இவர் வாங்கிவிட்டார். பைக் வாங்கிய முதியவரைக் கண்டு க்ஷோரூம் ஊழியர்கள் உண்மையில் ஆச்சரியத்தில் திளைத்தே போய்விட்டனர். ஏனெனில் ஹார்லி டேவிட்சன் பைக்கிற்கான தொகையை முழுவதும் ரொக்கமாகவே இவர் செலுத்தியுள்ளார்.

பார்ப்பதற்கு சாப்பிட கூட வழியில்லாதவரைப் போல தோற்றம் கொண்ட இந்த அழுக்கு உடை அணிந்த முதியவர் முழு தொகையையும் ரொக்கமாக செலுத்தியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இவர் வாங்கிய ஹார்லி டேவிட்சன் பைக்கின் விலை தாய்லாந்து நாட்டு மதிப்பில் 75300 தாய் பாத்கள் ஆகும். அதாவது இலங்கை நாணயப்படி சுமார் 24 இலட்சம்  ரூபாய் என்பது உண்மையில் வியக்க வைக்கிறது.

(17000 அமெரிக்க டாலர்கள்) இவர் ஒரு முன்னாள் மெக்கானிக். ஓய்வுகாலத்தில் தான் இதுவரையிலும் சேர்த்து வைத்திருந்த பணத்தை கொண்டு தன் கணவு வாகனமான ஹார்லி டேவிட்சன் பைக்கை இந்த முதியவர் வாங்கியுள்ளார். முதியவரான லங் டேச்சா ஷோரூமில் பைக்கை பரிசோதிப்பது பைக் மீது அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தோற்றத்தை கொண்டு ஒருவரை மதிப்பிடுவது எந்த அளவுக்கு அபத்தமானது என்பதற்கு சான்றாக சமூக வலைத்தளங்களில் முன்னுதாரமாக தற்போது லங் டேச்சா மாறியுள்ளார். லங் டேச்சா ஹார்லி பைக்கை வாங்கும் முன்பு பல ஷோரூம்களிலும் அவர் மனிதராக கூட மதிக்கப்படவில்லையாம். அந்த ஷோரூம் ஊழியர்கள் புறத் தோற்றத்திற்கு மதிப்பு கொடுத்து சக மனிதராக இவரை மதிக்காததால் ஏற்பட்ட இழப்பை இந்நேரம் அந்த ஷோரூம் ஊழியர்களும் உணர்ந்திருப்பர்.உள்ளூர் நாயகனாக தற்போது உருவெடுத்துள்ள லங் டேச்சா ஒரு நேர்மையான மனிதர் என்று அவரின் மூத்த சகோதரி பெருமிதத்துடன் அவரைப் பற்றி குறிப்பிட்டார்.

இதுவரையில் தான் கஷ்டப்பட்டு உழைத்து சேமித்த பணத்தை கொண்டு தன்னுடைய லட்சியத்தை அவர் நிறைவேற்றியுள்ளார் என்றும் அவரின் சகோதரி மேலும் குறிப்பிட்டார். அந்த ஷோரூம் ஊழியர்கள் போல் தான் பலரும் நம் மத்தியிலும் உள்ளனர். லங் டேச்சா போல் இங்கு பலரும் வாழ்ந்து வருகின்றனர். இதன் மூலம் நாம் இரண்டு பாடத்தை கற்றுக்கொள்ள முடிகிறது.

ஒன்று: தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பிடக் கூடாது
இரண்டு: லட்சியத்தை மனதில் வைத்துக்கொண்டு அதற்காக கடினமாக உழைத்து காசு சேமிக்க
வேண்டும்
- அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்.,

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top