"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
25/5/17

புனிதமிகு ரமலான் மாதம் துவங்குவதையொட்டி கட்டண பார்க்கிங் மற்றும் மெட்ரோ நேரங்களில் மாற்றம் செய்து துபை போக்குவரத்துத் துறை (RTA) அறிவித்துள்ளது.

பார்க்கிங்:
Zones A, B, C, D and G ஆகிய மண்டலங்களில் சனிக்கிழமை முதல் வியாழன் வரை காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரையும் பின்பு இரவு 7 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையும் பார்க்கிங் கட்டணங்கள் செலுத்த வேண்டும்.

துபை சிலிக்கான் ஓயஸீஸ் (Dubai Silicon Oasis) மற்றும் Zone H மண்டலத்தில் சனிக்கிழமை முதல் வியாழன் வரை காலை 8 மணிமுதல் இரவு 10 மணிவரையும் பார்க்கிங் கட்டணங்கள் செலுத்த வேண்டும்.

டீகாம் (Tecom) மற்றும் Zone F மண்டலத்தில் சனிக்கிழமை முதல் வியாழன் வரை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையும் பார்க்கிங் கட்டணங்கள் செலுத்த வேண்டும்.

தேரா மீன் மார்க்கெட் (Fish Market) மற்றும் Zone E மண்டலத்தில் சனிக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினசரி  காலை 8 மணிமுதல் இரவு 11 மணிவரையும் பார்க்கிங் கட்டணங்கள் செலுத்த வேண்டும்.

மெட்ரோ: ரெட்லைன்
சனிக்கிழமை முதல் புதன் வரை தினமும் காலை 5.30 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை இயங்கும்.

வியாழக்கிழமைகளில் காலை 5.30 மணிமுதல் நள்ளிரவு (வெள்ளிக்கிழமை அதிகாலை) 1 மணிவரையும்

வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணிமுதல் நள்ளிரவு (சனிக்கிழமை அதிகாலை) 1 மணிவரையும் இயங்கும்.

எக்ஸ்பிரஸ் மெட்ரோ நேரங்களில் எத்தகைய மாற்றங்களும் இல்லை.

மெட்ரோ: கிரீன்லைன்
சனிக்கிழமை முதல் புதன் வரை தினமும் காலை 5.50 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை இயங்கும்.

வியாழக்கிழமைகளில் காலை 5.50 மணிமுதல் நள்ளிரவு (வெள்ளிக்கிழமை அதிகாலை) 1 மணிவரையும்

வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணிமுதல் நள்ளிரவு (சனிக்கிழமை அதிகாலை) 1 மணிவரையும் இயங்கும்.

துபை டிராம்:
சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை தினமும் காலை 6.30 மணிமுதல் நள்ளிரவு (வெள்ளிக்கிழமை அதிகாலை) 1 மணிவரையும்,

வெள்ளிக்கிழமைகளில் காலை 9 மணிமுதல்  நள்ளிரவு (சனிக்கிழமை அதிகாலை) 1 மணிவரையும் இயங்கும்.

கஸ்டமர் ஹேப்பினஸ் சென்டர்கள் (Customers' happiness centres) எனப்படும் RTA வாடிக்கையாளர் அலுவலகங்கள்:
அனைத்து சென்டர்களும்சனிக்கிழமை முதல் வியாழன் வரை திறந்திருக்கும்.

உம்மு ரமூல், அல் பர்ஸா, தெய்ரா மற்றும் அல் கபப் (Al Kafaf) சென்டர்கள் ஆகியவை தினமும் காலை 9 மணிமுதல் பகல் 2 மணிவரை செயல்படும்.

அல் தவார், அல் மனாரா, அல் அவீர் சென்டர்கள் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்படும்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.