"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
21/5/17

பால் மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருட்களுள் ஒன்று. ஆனால் இந்த பாலை எப்போது குடிப்பது நல்லது? பகல் வேளையில் குடித்தால் நல்லதா அல்லது இரவில் குடிப்பது நல்லதா? பொதுவாக உடலுக்கு வேண்டிய கால்சியம் மற்றும் புரோட்டீனைப் பெற சிறந்த வழி தவறாமல் பால் அருந்துவதுதான்.

ஆனால் இந்த பாலை குறிப்பிட்ட நேரங்களில குடிப்பதால், குறிப்பிட்ட ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இப்போது பாலை எந்த நேரத்தில் குடித்தால் என்ன நன்மை கிடைக்கும் என பார்க்கலாம்.

காலை உணவின் போது அதிகளவு புரோட்டீன் வேண்டுமானால், பாலை காலையில் குடிப்பது நல்லது. மேலும் பாலில் கால்சியம் மற்றும் புரோட்டீனைத் தவிர, பொட்டாசியம், மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்கள் போன்றவையும் உள்ளது.

காலை வேளையில் உடற்பயிற்சியில் ஈடுபடுபவராயின் காலையில் பால் குடிப்பதன் மூலம், புரோட்டீன் மற்றும் கால்சியம் கிடைத்து, எலும்புகளும், தசைகளும் வளர்ச்சி பெறுவதோடு, புதுப்பிக்கவும் ஆரம்பிக்கும்.
நாள் முழுவதும் அடிக்கடி பசி எடுக்கக்கூடாது என்று நினைப்பவர்கள், காலையில் பால் குடிப்பது நல்லது. ஆனால் பாலைக் குடித்த பின் வயிறு உப்புசத்துடன் இருப்பதை உணர்ந்தால், காலையில் குடிப்பதை தவிர்த்திடுங்கள்.


இரவில் தூங்க முடியாமல் அவஸ்தைப்படுபவர்கள், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலைக் குடிப்பது நல்லது. இதனால் மனம் அமைதியடைந்து, விரைவில் ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.
நாள் முழுவதும் உழைத்து களைத்து மனம் சோர்ந்திருக்கும் போது, அந்த மனச் சோர்வில் இருந்து வெளிவர இரவில் ஒரு டம்ளர் பாலைக் குடியுங்கள். இதனால் அதில் உள்ள அமினோ அமிலமான ட்ரிப்டோஃபேன், மூளையில் செரடோனினை வெளியிடச் செய்து, ரிலாக்ஸாக உணர வைக்கும்.
உடல் எடையைக் குறைக்க நினைத்தால், இரவில் பால் குடிக்காதீர்கள். மேலும் இரவில் பால் குடித்தால், அது சிலருக்கு செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

எப்போது பால் குடிப்பதாக இருந்தாலும், வெதுவெதுப்பான பாலைக் குடியுங்கள். இதனால் செரிமானம் சிறக்கும். மேலும் அளவுக்கு அதிகமாக பால் குடிப்பது நல்லதல்ல. ஒரு நாளைக்கு 150-200 மிலி பால் போதுமானது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.