Mohamed Farook Mohamed Farook Author
Title: பின்பற்றும் மாணவ சமூகம் வழி காட்டும் இளைய சமூகம்
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
நேற்று மாலை பொழுதாக இருக்கும் அந்த காட்சிகள் நான் கண்டபோது, அதன் பிறகு தான் தோன்றியது இப்படி ஒரு கட்டுரை எழுத வேண்டுமென்று....... நம...
நேற்று மாலை பொழுதாக இருக்கும் அந்த காட்சிகள் நான் கண்டபோது, அதன் பிறகு தான் தோன்றியது இப்படி ஒரு கட்டுரை எழுத வேண்டுமென்று.......

நமதூர் மாணவர்கள் ஒரு கூட்டமாக கையில் ஒரு நோட் பேனவுடன் கடை கடையாக ஏறி இறங்கி கொண்டிருந்தார்.அவர்கள் அனைவருமே 8-ம் வகுப்பு முதல் 10 -ம் வகுப்பு மட்டுமே படிக்க கூடியவராக இருந்தார்கள். 

நான் அவர்களையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன், அப்போது தான் என் காதுகளில் ஒலித்தது அந்த சத்தம் "பாய் நாங்க கிரிக்கெட் டௌர்னமெண்ட் மேட்ச் நடத்தப்போறோம் எங்களுக்கு ஸ்பான்சர் பண்ணுங்க பாய்" என்று. ஆச்சரியமாக இருக்கிறது இவ்வளவு சிறிய வயதில் இவர்களுக்குள் இத்தணை திறமைகள், ஒருங்கிணைக்கும் திறன், அனைத்தையும்  கட்டமைக்கும் வல்லமை என்று. இவர்களுக்கு இப்படி ஒரு சிந்தனை வருவதற்கு எது தூண்டுதலாக இருந்திருக்கும் என்று சிந்திக்கையில்தான் ஒரு நிதர்சனமான உண்மை புலப்பட்டது.

நமதூர் இளைஞர்கள் கபடி போட்டி, வாலிபால் போட்டி, கிரிக்கெட் போட்டி என்று பல போட்டிகளை டௌர்னமெண்ட் என்ற பெயரில் நடத்துகிறார்கள். அதை பார்த்து தான் இந்த பள்ளி மாணவர்களும் இப்போது கிரிக்கெட் போட்டி நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த ஒரு சம்பவத்தை வைத்து மட்டும் நான் ஒரு முடிவுக்கு வந்து விடவில்லை பல உதாரணங்கள் இருக்கின்றன. 

நமது ஊர் இளைஞர்கள் இரவு நேரங்களில் பைக், கார்களில் TTPL தொழுதூர் TOLL BOOTH உணவகங்களுக்கு செல்வது வழக்கம் அவர்களை போல் நம் பள்ளி மாணவர்களும் செல்கிறார்கள். சமீபமாக நடந்த சந்தனக்கூடு நிகழ்ச்சியில் நம் இளைஞர்கள் யாரும் கலந்துக்கொள்ளவில்லை அதை அப்படியே பின்பற்றும் விதமாக நம் மாணவர்களும் கலந்து கொள்ளவில்லை. இன்று பள்ளி மாணவர்கள் facebook , twitter , whats app களில் status போடுவது like comment செய்வது இவற்றிலும் கூட இளைஞர்களின் வழிகாட்டுதல்கள் உள்ளது.

சில வருடங்களுக்கு முன்பெல்லாம் கோடை விடுமுறை நாட்களில் இளைஞர்கள் ஊட்டி, கொடைக்கானல் என்று சுற்றுலா செல்வது வழக்கம் அவர்களை போல் பள்ளி மாணவர்களும் தங்கள் பங்கிற்கு சுற்றுலா செல்வதை பார்த்திருக்கலாம். 

இன்னும் சொல்லப்போனால் நான் பள்ளி மாணவனாக இருந்தபோது ரம்ஜான் மாதம் வந்துவிட்டால் போதும் இளைஞர்கள் சங்கத்தில் சேர்ந்துகொண்டு பையத் பாடுவதும் இரவு முழுவதும் தூங்காமல் ஆபியம், கண்ணாமூச்சி, கொட்டான் கொட்டான், ஓடிப்பிடித்து விளையாடுவது என்று பள்ளிவாசல் தெருவே களைகட்டும். அவர்களைப்போல் நாங்களும் விளையாடுவது, அவர்கள் பின்னே பையத் பாடிக்கொண்டு போவது என்று இருந்தோம்.

இப்படியாக அந்தந்த காலகட்டங்களுக்கு ஏற்ப அப்போது இருக்கும் trend களுக்கு ஏற்றவாறு இளைஞர்கள் பல விஷயங்களை செய்து வரும்போது, பள்ளி மாணவர்களும் அவர்களை வழிதொடர்ந்து வருகிறார்கள்.  

ஆக நமது சில இளைஞர்கள் passport, airport, visa, dubai என இல்லாமல் painting, driver, electrician என தொழிலிலும் இன்னும் சில இளைஞர்கள் சிகரெட், பாக்கு, மது என்று இல்லாமல், நம் மாணவர்களுக்கு agriculture, aviation, fine arts, journalism, marine, law, medical, NIT, IIT, NEET preparation, JEE -(main, advance preparation). என்று நீங்கள் படிப்பதன் மூலம் மாணவர்களின் கல்விக்கும், TNPSC, UPSC -(IAS, IPS, IFS.,), RRB, SSC, TRB, TET, GATE etc., போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி எடுப்பது தேர்ச்சி பெற்று அரசு வேளைகளில் இணைவது என்று நீங்கள் செய்வதன் மூலம் மாணவர்களின் எதிர்காலத்திற்கும், அதே போன்று தொழுகை, நன்னடத்தை, நல்ல காரியங்கள் செய்வது, ஊர் ஒற்றுமை, பெரியவர்களுக்கு மரியாதை என்று நீங்கள் நடப்பதில் மூலம் மாணவர்களின் நல்வாழ்விற்கும் வழிகாட்ட வேண்டும்.

இளைஞர்கள் நீங்கள் நினைத்தால் நிச்சயம் முடியும். மாணவர்களாகிய அவர்கள் இளைஞர்களாகிய உங்களை உற்று நோக்குகிறார்கள், பின்பற்றுகிறார்கள். இது இயற்கையாகவே யார் தூண்டுதலும் இல்லாமலேயே நடக்கிறது. ஆக நமதூரின் அடுத்த தலைமுறை எந்த பாதையில் பயணிக்க வேண்டும் என்பதை இளைஞர்களாகிய நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.....!!

## நீங்கள் வழிகாட்டியாக அவர்கள் பின்தொடர்பவர்களாக  ##

                                                                                 - அ. பைசல் அஹமது, வ.களத்தூர்,

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top