"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
7/5/17

இந்தியாவின் உத்திர பிரதேசத்தில் முஸ்லிம்கள் என்று நினைத்து இரண்டு இந்துக்களை பசு பாதுகாப்புப் படையினர் கடுமையாக தாக்கியுள்ளனர். உத்திர பிரதேசம் கிரேட்டர் நோய்டா மாவட்டத்தில் சிஸ்ராமஜிபூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த பால் வியாபாரிகளான ஜபர் சிங் (35) பூப் சிங் (45) என்ற இரு இந்துக்கள் வெளியூரிலிருந்து பசுக்களை வாங்கி வந்து அவர்களது செட்டில் விட்டுவிட்டு மரத்தடியில் கொஞ்சம் ஓய்வெடுத்தனர்.

அப்போது அங்கு வந்த பசு பாதுகாப்புப் படை (Gau Rakshaks) என்ற வன்முறையாளர்கள் அந்த இரண்டு பேரையும் முஸ்லிம்கள் என நினைத்து சரமாரியாக தாக்கினர். பலத்த காயம்டைந்த அவர்கள் நாங்கள் முஸ்லிம்கள் இல்லை என்று கத்திக் கொண்டே பசு பாதுகாப்புப் படை வன்முறையாளர்களிடமிருந்து தப்பியோடினர்.

இது குறித்து அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் கூறும்போது அவர்கள் இருவரும் நல்ல உழைப்பாளிகள். பால் வியாபாரம் செய்துவரும் அவர்கள் பசுவை செட்டில் கட்டி வைத்துவிட்டு மிகவும் சோர்ந்து போயிருந்ததால் மரத்தடியில் ஓய்வெடுத்தனர். ஆனால் எங்கிருந்தோ வந்த பாஜகவினரும் பசு பாதுகாப்புப் படையினரும் அவர்களை கடுமையாக தாக்கினர் என்றார்.

இந்நிலையில் படுகாயமடைந்த ஜபர் சிங் பூபர் சிங் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மகேஷ் ஆஷிஷ் ஓம்பால் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

- அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்-

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.