"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
12/5/17

நீங்கள் தேர்வில் தோல்வி அடைந்ததற்கும் அல்லது குறைந்த மதிப்பெண்கள் பெற்றதற்கும் பல காரணங்கள் இருக்கலாம். 

ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால், இத்துடன் உங்கள் வாழ்க்கை முடிந்து போய்விடவில்லை என்பது தான். கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வழிமுறைகள் நீங்கள் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது பற்றி முடிவெடுக்க உதவக்கூடும்.
 
1. மனம் விட்டு பேசுங்கள் : தோல்வி ஏற்பட்டதற்கான காரணங்கள் பற்றி உங்கள் ஆசிரியர், பெற்றோர் மற்றும் நண்பர்களுடன் பேசுவதால் மன இறுக்கம் குறைவதுடன், அடுத்து என்ன செய்வது என்பது பற்றி சில நல்ல ஆலோசனைகள் கிடைக்கும்.

2. உங்கள் முன் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் சிந்தித்துப் பாருங்கள் : மீண்டும் தேர்வு எழுதுவது, படிக்கும் முறையில் மாற்றம் செய்வது அல்லது துறையை மாற்றிக்கொள்வது ஆகியவற்றை பற்றி ஆலோசித்து முடிவெடுங்கள்.

3. உங்கள் பலம் என்ன என்று கண்டுபிடியுங்கள் : உங்களுக்கு பிடித்த, உங்களால் சிறப்பாக செயல்பட முடியும் என நீங்கள் நம்பும் துறை சார்ந்த படிப்புகளில் சேர்வது பற்றி சிந்தியுங்கள்.

4. வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளுங்கள் : இந்த கல்லூரியில் தான் சேரவேண்டும் அல்லது இந்த துறையில் மட்டும் தான் சேர்வேன் என்று பிடிவாதத்துடன் இருக்காமல், கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக எப்படி பயன்படுத்திக்கொள்வது என்பது பற்றி சிந்தியுங்கள்.

5. எல்லாம் கடந்து போகும் : அடுத்து செய்யவேண்டியது என்ன என்பது பற்றி சிந்திக்கும் அதே வேளையில், என்ன செய்தாலும் கடந்த காலத்தை மாற்ற முடியாது என்ற உண்மையை ஏற்றுக்கொண்டு, நடந்து முடிந்த கசப்பான விஷயங்களை கடந்து செல்லுங்கள்.

சிறிது காலம் ஓய்வு எடுத்துக்கொண்டு, நேர்மறை எண்ணத்துடனும் புத்துணர்ச்சியுடனும் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறுங்கள். வாழ்த்துக்கள்
- முஹம்மது பாரூக்.,

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.