Mohammed Farook Mohammed Farook Author
Title: ரம்ஜான் மாத இஃப்தார் விருந்துகளில் பசும்பாலை மட்டுமே பரிமாறுவோம்! - ஆர்எஸ்எஸ்
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
உத்தரப் பிரதேசத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம் பிரிவானது இந்த ஆண்டு ரம்ஜான் மாதத்தின்போது நடத்தும் இஃப்தார் விருந்துகளில் பசும்பால் ம...
உத்தரப் பிரதேசத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம் பிரிவானது இந்த ஆண்டு ரம்ஜான் மாதத்தின்போது நடத்தும் இஃப்தார் விருந்துகளில் பசும்பால் மற்றும் பால் பொருள்கள் மட்டுமே பரிமாறப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம் பிரிவான முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் (எம்ஆர்எம்) கடந்த 2002-இல் அப்போதைய தலைவர் கே.எஸ்.சுதர்சனின் முன்முயற்சியின் பேரில் உருவாக்கப்பட்டது. முஸ்லிம்களையும் ஆர்எஸ்எஸ் பக்கம் ஈர்ப்பதற்காக இந்தப் பிரிவு தொடங்கப்பட்டது.

இந்நிலையில், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் பிரிவின் தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் மகிராஜ் துவஜ் சிங், லக்னௌவில் பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:
இந்த ஆண்டு மே 26-ஆம் தேதி தொடங்கும் புனித ரம்ஜான் மாதத்தின்போது, எங்கள் அமைப்பின் சார்பில் வெள்ளிக்கிழமைகளில் இஃப்தார் விருந்துகள் நடத்தப்பட உள்ளன. அவற்றில் பசும்பால் மற்றும் பால் பொருள்களை மட்டுமே பரிமாறும்படி வலியுறுத்தப்பட உள்ளது.

ரம்ஜான் மாதத்தின்போது நாள்தோறும் விரதம் இருக்கும் எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இனி நாள் முடிவில் ஒரு தம்ளர் பசும்பால் குடித்து விரதத்தை முடிப்பார்கள். அவ்வாறு முடிப்பது அதுவே முதல் முறையாக இருக்கும். அதேபோல், உத்தரப் பிரதேசத்தில் இதுபோன்ற இஃப்தார் விருந்து நடத்தப்படுவதும் அதுவே முதல் முறையாக இருக்கும்.

இதன் மூலம் "பசுக்களைக் காப்போம்' என்ற தகவலும், "பசுவின் இறைச்சியை உண்பது நோய்களுக்கு வழிவகுக்கும்' என்ற தகவலும் வெளிப்படுத்தப்படும். பசும்பாலைக் குடிப்பதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். "பசும்பால் நமது ஆரோக்கியத்துக்கு உகந்தது. பசும்பால் மூலம் தயாரிக்கப்படும் நெய்யானது மருந்து போன்றது' என்ற கருத்தை முஸ்லிம் அறிஞர்கள் கூட கொண்டுள்ளனர். பல்வேறு ஆயுர்வேத மருந்துகளைத் தயாரிப்பதற்கான அடிப்படையாக பசு நெய் விளங்குகிறது.

ரம்ஜான் மாதத்தின்போது எங்கள் அமைப்பின் சார்பில் சிறப்புத் தொழுகைகள் நடத்தப்பட உள்ளன. அப்போது பசுவைக் காப்பாற்றுமாறு கோரிக்கைகள் விடப்படும்.

விலங்குகள், பறவைகள், மரங்கள், செடி கொடிகள் என அனைத்து உயிரினங்களும் தாங்கள் உயிர் வாழ்வதற்கு அல்லாவுக்கு (இறைவனுக்கு) கடன்பட்டுள்ளன. அவற்றிடம் நாம் மனிதநேயமிக்க அணுகுமுறையைப் பின்பற்றினால் இறைவனின் ஆசி நமக்குக் கிடைக்கும் என்றார் அவர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top