"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
17/5/17

இந்தியாவின் கேரளா மாநில கோட்டயம் ஜில்லா ஈராட்டுபேட்டை முஸ்லீம் உயர் இரண்டாம் நிலை மகளிர்  பாடசாலை  மாணவி ஆயிஷா சஹீர் இந்தியாவில் கடந்த வாரம் வெளியான பிளஸ் டூ (+ 2) பரீட்சையில் அணைத்து பாடங்களிலும் 1200 புள்ளிகளுக்கு 1200  புள்ளிகள் எடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவில் சமகாலத்தில் முஸ்லிம்களுக்கு பல்வேறு நெருக்கடிகளை இந்துத்துவ அமைப்புகள் நாடு முழுவதும் கட்டவிழ்த்து  வரும் வேளையில் பல சிரமங்களுக்கு மத்தியில் இம் மாணவி அணைத்து பாடங்களிலும் அணைத்து புள்ளிகளையும் பெற்று சாதனை படைத்தது இருப்பது  முஸ்லிம்களுக்கு ஆறுதலை கொடுப்பதாக அமைந்துள்ளது.

வரலாற்று சாதனை படைத்த ஆயிஷா சஹீர் பல்வேறு சமூக அமைப்புக்களால் நாளாந்தம் பரிசுகள் வழங்கி கௌரவிக்க படுவது முக்கிய நிகழ்வாக கேரளா முஸ்லிம்கள் மத்தியில் காணப்படுவது சிறப்பு அம்சமாகும்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.