Mohamed Farook Mohamed Farook Author
Title: மாணவர்களை துரத்தும் மதிப்பெண் பீதி.! பெற்றோர்களே கவனிக்க வேண்டியது! - முஹம்மது பாரூக்
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
விடுமுறை கொண்டாட்டத்தில் இருக்கும் மாணவர்கள் மத்தியில் தேர்வு முடிவுகளை நினைத்து  பதட்டத்தில் பரிதவிக்கும் மாணவர்கள் பலர் உள்ளனர். இச்...
விடுமுறை கொண்டாட்டத்தில் இருக்கும் மாணவர்கள் மத்தியில் தேர்வு முடிவுகளை நினைத்து  பதட்டத்தில் பரிதவிக்கும் மாணவர்கள் பலர் உள்ளனர்.

இச்சமயத்தில் பெற்றோர் உஷாராக செயல்படவேண்டியது அவசியம் தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் மே, 12ம் தேதி வெளியிடப்படவுள்ளது.

மாணவர்கள் மத்தியில் தேர்வில் தோல்வி, மதிப்பெண் குறைவு போன்ற பல காரணங்களால் தோல்வி அடைந்த மாணவன் மட்டும் அல்லாமல்  1,100க்கும் மேற்பட்ட மதிப்பெண் பெற்ற மாணவர்களும் மதிப்பெண் குறைவு என தற்கொலை செய்துகொள்கின்றனர். - என்பது இன்றைய கல்வி முறையின் அவலம்.

குறிப்பாக தேர்வு நேரத்திலும் முடிவுகள் வெளிவந்த பின், 90 நிமிடத்துக்கு ஒருவர் தற்கொலை முயற்சியும், ஆறு மணி நேரத்திற்கு ஒருவர் தற்கொலையும் செய்வதாக, தேசிய குற்றவியல் ஆய்வகம் சர்வேயில் தெரிவிக்கிறது.

கடந்த, 2012 — 13ம் கல்வியாண்டு, தேர்வு முடிவு வெளியிட்ட பின், தமிழகத்தில், 18 மாணவர்களும், 2013 — 14ம் ஆண்டில், பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான, ஒரு வாரத்தில், 30 மாணவர்களும் தற்கொலை செய்துள்ளனர்.

கடந்த, 10 ஆண்டுகளில் தற்கொலை பல மடங்கு உயர்ந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இச்சூழலில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மனநிலையை ஆய்வு செய்வது மிகவும் அவசியம் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்திருக்கும் பிள்ளைகளிடம் எதிலும் விருப்பமின்றி இருத்தல், துாக்கமின்மை, சரியாக சாப்பிடாமல் இருப்பது,  தன் சுகாதாரத்தில் அக்கறையில்லாமல் இருப்பது, மற்றவர்களுடன் அதிகம்  பழகாமல் இருப்பது, போன்ற அறிகுறிகள் உள்ளதா என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்...

மாணவர்களிடம், மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் தோல்வி முடிவால் தற்கொலை செய்து கொள்ளும் வாய்ப்பு அதிகம் என்பதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும்.

மன அழுத்தத்துடன் மாணவர்கள் இருப்பதை கண்டறிந்தால், மனம்விட்டு வெளிப்படையாக பேச தயங்க வேண்டாம். தேர்வு முடிவு எதுவாக இருப்பினும், ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம் மதிப்பெண்கள் என்பது மட்டும் வாழ்க்கையல்ல என்பதை மாணவர்களின் மனதில் பெற்றோர் விதைக்கவேண்டும்.

மகிழ்ச்சியான தருணங்களை நினைவுபடுத்தி, மனதின் போக்கை திருப்புங்கள்……


தனக்கு ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக உங்களில் யாரும் மரணிக்க ஆசைப்படக் கூடாது. அப்படிச் செய்ய வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டால் இறைவா! நான் வாழ்வது எனக்குச் சிறந்ததாக இருக்கும் 
வரை என்னை வாழ வை! நான் மரணிப்பது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை மரணிக்கச் செய் என்று கூறட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி),நூல்: புகாரி 5671, 6351.

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!
(அல்குர்ஆன் 2:155)யா அல்லாஹ்! 

உன் வழிகாட்டுதல்களைக் பின்பற்றி வாழ்ந்து மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

                                                             - முஹம்மது பாரூக்

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top