"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
27/5/17

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாடு,காளை, எருமை மற்றும் ஒட்டகம் விற்பனை குறித்த அரசாணை நாட்டு மக்களின் உணவு உரிமையில் தலையிடும் அப்பட்டமான உரிமை மீறல் ஆகும். கோவில்களில் திருவிழாவின் போது கூட மாடு பலியிடுவதை கூட இந்த ஆணை தடைச் செய்கிறது. எனவே இந்த பிரச்னை முஸ்லிம்கள் தொடர்பானது என்பதை தாண்டி அனைவரையும் பாதிக்கும் பிரச்னையாக எடுத்துச் செல்ல வேண்டும்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் மே 29 அன்று மாலை 4 மணிக்கு அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஒரே நேரத்தில் இன்ஷா அல்லாஹ் நாம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், சிபிஐ, சிபிஎம், தி.க. உள்ளிட்ட தோழமை கட்சிகள் மற்றும் இறைச்சி வியாபாரிகள், விவசாய பிரதிநிதிகள் பங்குக் கொள்வார்கள். 

சுவரொட்டி வடிவம் விரைவில் நமது இணைய தளத்தில் வெளியிடப்படும்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.