"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
26/5/17

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

உலகின் பெரும்பாலான நாடுகளில் நாளை ( சனிக்கிழமை ) முதல் புனித ரமலான் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்பார்ந்த வாசகர்கள் அனைவருக்கும் வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் சார்பாக ரமலான் நல் வாழ்த்துக்கள்!

ரமலான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது... நன்மைகளை குவிக்கும் நற்பாக்கியமிகு ரமலான் மாதம் நம்மை நெருங்கிக்கொண்டிருக்கிறது, பாவங்களை மன்னிக்கும் புன்னியமிகு ரமலான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது, 

நற்செயல்களால் சொர்க்கத்தின் வாசலை திறக்கச் செய்யும் சங்கைமிகு ரமலான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது, நரகத்தின் வாயிலை மூடச்செய்கின்ற அல்லாஹ்வின் அருள்மழைப் பொழியும் அருமைமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

ஷைத்தானுக்கு விலங்கிட்டு மனிதனை மனிதனாக வாழச்செய்யும் மகத்துவமிக்க ரமலான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது, ஷைத்தானின் தூண்டுதலால் நிலையில்லா உலக வளங்களின் மீது மூழ்கிக்கிடந்தவர்களுக்கு நிரந்தர சுவனத்தின் எல்லை இல்லா இன்பத்தை நிணைவூட்டரமலான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

கை நீட்டியவர்களுக்கு கையிலுள்ளதைக் கொடுத்து கண்ணீரைத் துடைக்கத்தூண்டும் காருண்ய மிக்க ரமலான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது, நன்மை – தீமைகளைப் பிரித்தறிவித்த மனிதவள மேம்பாட்டிற்கு வழி வகுத்தமாமறைக்குர்ஆன் இறக்கி அருளப்பட்ட புனித மாதம் நம்மை நெருங்கிக்கொண்டிருக்கிறது,

இன்ஷா அல்லாஹ் நாம் அனைவரும் இந்த ரமாலானை முழுவதுமாக அடைய அல்லாஹ் அருள் புரிவனாக... ஆமின்.

- முஹம்மது பாரூக்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.