"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
11/5/17

எகிப்தில் உயிரிழந்த தங்கள் குழந்தையின் சடலத்தை 11 நாட்கள் உடன் வைத்திருந்த பெற்றோரின் செயல் மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

எகிப்து நாட்டை சேர்ந்தவர் ஜேம்ஸ். இவர் மனைவி Ilse Fieldsend. இவர்களின் மகள் Georgia Fieldsend (3) க்கு கடந்த 2013ல் திடீரென உடல் நல கோளாறு ஏற்பட்டு தனது தாயின் மடியில் மயங்கி விழுந்துள்ளார்.
பின்னர் மருத்துவர்களிடம் Georgiaஐ காட்ட அவருக்கு மூளையில் கொடிய நோய் இருப்பதும் அவர் சில நாட்கள் தான் உயிரோடு இருப்பார் என்பது தெரியவந்தது.


பின்னர், ஐந்து நாட்கள் கழித்து Georgia உயிரிழந்துள்ளார். ஆனால் Georgia சடலத்துக்கு அவர் பெற்றோர் உடனே இறுதி சடங்குகள் செய்ய மனமில்லாமல் 11 நாட்கள் தங்கள் வீட்டிலேயே வைத்துள்ளனர்.
அப்போது நடந்த இந்த சம்பவத்தை சோகத்துடன் Ilse தற்போது உலகுக்கு தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், என் குழந்தை சடலத்துக்கு அருகில் படுத்து கொண்டு அவள் மேல் நான் எவ்வளவு அன்பு வைத்துள்ளேன் என அழுது கொண்டே அவளிடம் கூறினேன்.
பின்னர் Georgiaவுக்கு பிடித்த உடைகள் மற்றும் ஷூக்களை அணிவித்தேன் என கூறியுள்ளார்.

பின்னர் Ilse மற்றும் ஜேம்ஸ் ஆகிய இருவரும் தங்கள் குழந்தையின் இரு பக்கத்திலும் படுத்து கொண்டு கண் கலங்கியுள்ளார்கள்.
நாட்கள் ஆக, Georgia சடலத்தின் நிறம் மாறியதை தொடர்ந்து 11 நாட்கள் கழித்து, சடலத்தை புதைத்துள்ளனர்.
அதற்கு முன்னதாக Georgia உடறுப்புகள் எடுக்கப்பட்டு தற்போது அது ஆறு பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது.

அதன் பின்னர், நோயால் பாதிக்கபட்டுள்ள குழந்தைகளுக்கு நன்கொடை வசூல் செய்து அவர்களுக்கு தரும் Ilse, உடலுறுப்பு தானம் குறித்தும் விழிப்புணர்வு நடத்தி வருகிறார்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.