"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
25/5/17

அமீரகத்தில் நடப்பு 2017 வருட 4வது காலாண்டு (அக். முதல் டிச. வரை) முதல் புகையில் பொருட்கள் (Tobacco products), சக்தி பானங்கள் (Energy Drinks) மீது 100% வரியும், கரியமிலவாயு ஏற்றப்பட்ட பானங்கள் (Carbonated Beverages) மீது 50% வரியும் ஏற்றப்படுவதாக அமீரக தேசிய வரிகள் ஆணையம் (Federal Tax Authority - FTA) அறிவித்துள்ளது. இந்த வரி விதிப்பின் மூலம் இதன் விலைகள் கடும் ஏற்றம் காணவுள்ளன.

அதேபோல் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அனைத்துப் பொருட்களின் மீதும் 5% மதிப்புக் கூட்டு வரி எனும் வாட் வரி (VAT) விதிக்கப்படும் என்றாலும் சர்வதேச போக்குவரத்து (Int'l Transportation), வியாபார சரக்குகள் (Commodities), ஏற்றுமதி (Exports), சுகாதாரம் (Health) மற்றும் கல்விசார் சேவைகள் (Educational Services), முதலீடு செய்யும் நோக்குடன் இறக்குமதி செய்யப்படும் தங்கம் ஆகியவற்றிற்கு இந்த வாட் வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

அதேபோல் கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்புக் கட்டிடங்களை விற்பது மற்றும் வாடகைக்கு விடுவதற்கும் முதல் 3 ஆண்டுகளுக்கு வாட் வரியிலிருந்து விலக்களிக்கப்படும். சில நிதிச் சேவைகள் மற்றும் காலி மனைகளும் வாட் வரிவிலக்கு பெறும்.

ஆவணங்களின்படி, ஆண்டுக்கு 375,000 திர்ஹம் வருமானம் ஈட்டும் அனைத்து நிறுவனங்களும் 2017 ஆம் ஆண்டின் 3வது காலண்டிற்குள் தங்களை வாட் வரி அமைப்பின் கீழ் பதிவு செய்து கொள்ள வேண்டும், 4வது மற்றும் இறுதி காலாண்டிற்குள் பதிவு செய்வது கட்டாயம். அதேபோல் 187,500 வருமானம் ஈட்டும் நிறுவனங்களும் தங்களை வாட் வரி அமைப்பின் கீழ் பதிவு செய்து கொள்ள வசதி ஏற்படுத்தித் தரப்படும்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.