"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
15/4/17

கல்லாறு தொலைக்காட்சி நேற்று முதல் வி.களத்தூர் மற்றும் அதன் சுற்று பகுதியிலும் தமது ஒளிபரப்பை துவங்கியது.

வேப்பந்தட்டை தாலுக்காவை மையமாக வைத்து கடந்த 2015 ஆம் வருடம் அக்டோபர் மாதம் நமது கல்லாறு தொலைக்காட்சி வேப்பந்தட்டையில் துவங்கப்பட்டது. வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம், அரும்பாவூர், பூலாம்பாடி, உடும்பியம், வீரகனூர், தம்மம்பட்டி, கெங்கவல்லி போன்ற ஏராளமான  பகுதிகளில் தமது ஒளிபரப்பை ஒரு வருடத்திற்கு மேலாக சிறப்பாக செய்து வருகிறது. வேப்பந்தட்டை தாலுக்காவில் நடைபெற்ற இரண்டு ஜல்லிக்கட்டு (அன்னமங்கலம் மற்றும் விசுவக்குடி) நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக நேற்று முதல் வி.களத்தூர், பிம்பலூர், மரவநத்தம், அகரம், திருவளாந்துறை, தைக்கால், பேரையூர் ஆகிய கிராமங்களிலும் தமது ஒளிப்பரப்பை விரிவுப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இப்பகுதி மக்களும் எமது கல்லாறு தொலைக்காட்சியை இனி கண்டு ரசிக்கலாம்.

இதற்காக ஒத்துழைப்பை வழங்கிய அனைத்து கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கும் கல்லாறு தொலைக்காட்சி சார்பாக தமது நன்றியை தெரிவிப்பதாக அதன் மேலாளர் தெரிவித்தார்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.