"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
29/4/17

மஸ்தானம்மா, 106 வயது மூதாட்டி. இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த குடிவாடா என்ற இடத்தை சேர்ந்தவர்.
இந்த வயதிலும் தனது எல்லா வேலைகளையும் தானே செய்துக் கொள்கிறார் மாஸ்தானம்மா.
குடும்பத்தார் உதவி எதையும் எதிர்பாராமல், சொந்த காலில் நிற்கிறார் மாஸ்தானம்மா. ஆனால், இவர் சொந்த காலில் நிற்பது யூடியூப் உதவியுடன் என்பது தான் ஆச்சரியமே!
மாஸ்தானம்மா பேரன் ஒரு நாள் இரவு நண்பர்களுடன் சேர்ந்த சமைத்து யூடியூப் சேனல் ஆரம்பித்து வீடியோ பதிவு செய்துள்ளனர்.
அது வைரலாகவே. பாரம்பரிய கிராமத்து உணவு பக்கம் அவர்களது பார்வை திரும்பியது
விதவிதமான சிக்கன், மீன், கடல்வாழ் உயிரின உணவுகள், தோசை போன்ற உணவுகளை சமைப்பதில் மஸ்தானம்மா செம மாஸ்.
இவரது சமையலுக்கு அந்த ஊரே அடிமை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
சாதிக்க, சம்பாதிக்க வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார் மாஸ்தானம்மா.
இதற்கு பெரும் உதவியாய் இருந்தவர் பேரன் லக்ஷன். நூறு வயதை தாண்டி ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார் இந்த தளர்ச்சி அடையாத மூதாட்டி.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.