Mohammed Farook Mohammed Farook Author
Title: பன்னாட்டு இஸ்லாமிய ராணுவ தலைவராக ரகீல் ஷெரிப் தேர்வுக்கு ஈரான் அதிருப்தி
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
இஸ்லாமாபாத்  - சவூதி அரேபியா தலைமையிலான பன்னாட்டு இஸ்லாமிய ராணுவத்தின் தலைவராக பாகிஸ்தான் முன்னாள் இராணுவத் தளபதி ரகீல் ஷெரீப் தேர்வு ...
இஸ்லாமாபாத்  - சவூதி அரேபியா தலைமையிலான பன்னாட்டு இஸ்லாமிய ராணுவத்தின் தலைவராக பாகிஸ்தான் முன்னாள் இராணுவத் தளபதி ரகீல் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு ஈரான் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியா தலைமையிலான பன்னாட்டு இஸ்லாமிய ராணுவத்தின் தலைவராக பாகிஸ்தான் முன்னாள் இராணுவத் தளபதி ரகீல் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு ஈரான் அதிருப்தி தெரிவித்துள்ளது. சவூதி அரேபியா தலைமையில் 39 நாடுகள் ஒன்றிணைந்து இஸ்லாமிய ராணுவ கூட்டமைப்பு என்ற தீவிரவாத தடுப்பு படையை அமைத்துள்ளது. துருக்கி, ஐக்கிய அமீரகம், பஹ்ரைன், வங்காள தேசம் உள்ளிட்ட பல இஸ்லாமிய நாடுகள் இக்கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளனர்.

தீவிரவாதிகளை வேட்டையாட ...
ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் செயல்படும் தீவிரவாத குழுக்களின் தாக்குதல்களை தடுப்பதும், தீவிரவாதிகளை வேட்டையாடுவதும் இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக, சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளில் உள்ள சில பகுதிகளை ஆக்கிரமித்துகொண்டு அங்கு வெறியாட்டத்தில் ஈடுபட்டுவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை வேட்டையாடுவது, இந்தப் படையின் தலையாய இலக்காகும்.

இந்தப் படையின் தலைவராக சமீபத்தில் ஓய்வு பெற்ற பாகிஸ்தான் ராணுவத் தளபதி ரகீல் ஷெரீப் கடந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார். விரைவில் அவர் பொறுப்பேற்க உள்ள நிலையில் ஈரான் அரசு ரகீல் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த பிரச்சனை தொடர்பாக அதிக கவனம் எடுத்துக் கொள்வதாகவும், ஒட்டு மொத்த இஸ்லாமிய நாடுகளின் உறவை இது சீர் குலைத்து விடக்கூடாது எனவும் ஈரான் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இது போன்ற விவகாரங்களில் ஈரான் அதிருப்தி தெரிவிப்பது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top