"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
29/4/17

இசையமைப்பாளர் இளையராஜா, எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும், அரசியல் விவகாரங்களில் தலையிடாமல் பேசுவார்.
ஆனால், கவிஞர் அப்துல் ரகுமானில் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர், திடீரென அரசியல் பேசினார்.
அப்போது, அவர் பேசியது,
விழாவுக்கு வந்தால் முதலில் இளையராஜா தலைமை தாங்குவார் என கூறுவார்கள் என எதிர்பார்த்தேன்.
ஆனால், யாரும் அறிவிக்கவில்லை. அறிவிச்சாங்களா… இல்ல… அப்புறம் எப்படி நான் தலைவரு… தலைவர் இல்லாம நடக்குது.
நாடு அப்படி போய்க்கிட்டு இருக்கு. நாடு அப்படி போறதால நாமும் நாட்டோட போவோம்.
நம்ம இல்லாம நாடு இல்ல. நாமதான் நாடு. அதனால் நான் யாருக்கும் தலைவன் அல்ல. இறைவனுக்கு மட்டும் தொண்டன்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழகத்தில் தற்போது தலைமை இல்லாமல் ஆட்சி நடப்பதாக இளையராஜா விமர்சித்தது, புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகர் கமல், ஒரு கருத்தை கூறினார்.
அது அமைச்சரை குறிப்பிட்டதாக கூறி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி இசையமைப்பாளர் இளையராஜாவும் கருத்தை கூறி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.