"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
29/4/17

மோடி கூட கண்டுகொள்ளாமல் தான் காலம் தாழ்த்தி வந்தார்.
விவசாயிகளை டெல்லி சென்று கண்டு கொண்டது போல பாசாங்கு காட்டி விட்டு செருப்பால் அடித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
வறட்சியால் எந்த விவசாயியும் தற்கொலை செய்துகொள்ளவில்லை என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தரில், மார்ச் மாதம் 14-ம் தேதி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலைமையில்,  காலவரையற்ற போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
காவிரி மேலாண்மை அமைப்பு, பயிர்க்கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, வித்தியாசமான போராட்டங்களில் விவசாயிகள் ஈடுப்பட்டனர். இந்தப் போராட்டம் 42 நாள்கள் நடைபெற்றது
இதனிடையே, தமிழக விவசாயிகள் பிரச்னைகள் குறித்து, தமிழ்நாடு பொதுநல வழக்காடு மையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஷ்ரா அமர்வு முன்பு ஏப்ரல் 13-ம் தேதி வந்தது. அப்போது, ‘விவசாயிகள் பிரச்னையில் தமிழக அரசு அக்கறைகாட்டவில்லை’ என்று, தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.’
தமிழக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று உச்சநீதிமன்றம் கண்டித்தது.
மேலும், ‘விவசாயிகள் தற்கொலை தொடர்பாக, இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும்’ என்றும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
விவசாயிகள் தற்கொலை குறித்து 2 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு கடந்த ஏப்ரல் 13-ம் தேதி உத்தரவிட்டது.
இதனிடையே இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பில் விவசாயிகள் தற்கொலை குறித்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தமிழகத்தில் வறட்சியால் எந்த விவசாயியும் தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும், தனிப்பட்ட பிரச்சனைகளின் காரணமாகவே விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியுள்ளது.
இதையடுத்து, உச்சநீதின்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு விவசாயிகள் தற்கொலை தொடர்பான வழக்கு மாற்றப்பட்டது

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.