"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
5/4/17

வன்னியில் விமான குண்டு தாக்குதலால் கொல்லப்பட்ட பொதுமக்கள் வெறும் எண்ணிக்கையில் முடிய கொழும்பில் குண்டு தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டால் அது தலைப்பு செய்தியாக மாறும்.

காசாவில் பொதுமக்கள் கொல்லப்பட்டால் அது வெறும் எண்ணிக்கை ஆனால் டெல் அவிவில் கொல்லப்பட்டால் அது தலைப்பு செய்தி. காஷ்மீரில் கொல்லப்பட்டால் அது எண்ணிக்கை ஆனால் நிவ் டில்லியில் கொல்லப்பட்டால் Flash News.காபூலில் கொல்லப்பட்டால் அது எண்ணிக்கை ஆனால் நிவ் யோர்க்கில் கொல்லப்பட்டால் அது Breaking News.ஈராக்கில் கொல்லப்பட்டால் அது எண்ணிக்கை ஐரோப்பாவில் கொல்லப்பட்டால் அது அன்றைய முக்கிய செய்தி.சிரியாவில் நேற்று நச்சு வாயு தாக்குதலால் கொல்லப்பட்ட ஒரு அப்பாவிக் குழந்தையின் நெற்றியில் எண்ணிக்கை இடப்பட்டு இந்த ஜீவனின் வாழ்க்கை முடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த குழந்தைக்கும் ஒரு பெயர் இருக்கும் அதற்குள் சுட்டி தனங்கள் இருந்திருக்கும் இந்த குழந்தையின் பெற்றோருக்கும் ஆசா பாசங்கள் இருந்திருக்கும். ஆனால் அவை எமக்கு தெரியாது. இது இன்றைய 58 பேரில் ஒன்று அந்த எண்ணிக்கை மட்டும் தான் எமக்குரிய செய்தி. இதுவே இந்த கொடூரத்தை செய்த ரஷ்யா குழந்தையாக இருந்திருந்தால் பெயருடன் தலைப்பு செய்தியாக மாறியிருக்கும்.

இப்படி உலகெங்கும் கொல்லப்படும் ஒவ்வொரு அப்பாவி ஆத்மாவுக்கும் பின்னால் ஒரு வாழ்க்கை இருக்கும். ஆனால் செய்திகளாக வாசிக்கும் எமக்கு அவை தெரிவதில்லை. அப்பாவிகளை கொலை செய்துவிட்டு ஆனந்த கூத்தாடும் கொலைகாரர்களின் அருவருப்பான நியாயங்கள் எமக்கு தேவையும் இல்லை. அப்பாவிகள் எந்த மதத்தில் என்ன பெயரில் என்ன நிறத்தில் இருந்தாலும் அப்பாவிகளே!!#IstandwithHumanity 

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.