Mohammed Farook Mohammed Farook Author
Title: ஒரே குடும்பத்தில் 22 பேர் வபாத்தான கொடூரம் - இரட்டை குழந்தைகளுடன் தந்தை கதறல்!!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
சிரியாவில் நடத்தப்பட்ட ரசாயன தாக்குதலில் அப்துல் ஹமீது அல்யூசுப் என்பவரின் 9 மாத இரட்டை குழந்தைகள் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 22...
சிரியாவில் நடத்தப்பட்ட ரசாயன தாக்குதலில் அப்துல் ஹமீது அல்யூசுப் என்பவரின் 9 மாத இரட்டை குழந்தைகள் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 22 பேர் பலியாகியுள்ளனர். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

சிரியாவில் கடந்த செவ்வாய் கிழமை Khan Sheikhoun என்ற இடத்தில் நடத்தப்பட்ட ரசாயானத்தாக்குதலில் 30 குழந்தைகள் 20 பெண்கள் உட்பட மொத்தம் 80-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த கோரசம்பவத்தில் Abdul Hamid al-Youssef என்பவரின் 9 மாத இரட்டையர் குழந்தைகளான Aya Ahmed மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 22 பேர் பலியாகியுள்ளனர்.

Abdul Hamid al-Youssef தனது 9 மாத இரட்டைக் குழந்தையின் உயிரற்ற உடலை ஏந்திய படி குட் பை சொல்லுங்கள் குட் பை சொல்லுங்கள் என்று கண்ணீருடன் மன்றாடிக் கொண்டிருந்த காட்சி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தன் இரட்டைக் குழந்தைகளை அவர் சுமந்து சென்று ரசாயனத் தாக்குதலில் பலியான தனது 22 குடும்ப உறுப்பினர்கள் புதைக்கப்பட்ட இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றார்.

இது குறித்து அயா ஃபாதல் என்பவர் கூறுகையில் தான் தனது 20 மாத குழந்தையை மார்பில் அணைத்த படி தெருவைச் சூழ்ந்த ரசாயன நச்சிலிருந்து காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் ஓடி வந்ததாகவும் ஆனால் தன் குடும்பத்தார் உட்பட இறந்தவர்களின் உடல்களுடன் லாரி ஒன்று வந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டதாகவும் கண்ணீருடன் கூறியுள்ளார்.

மேலும் சிரியாவில் நடந்த தாக்குதல்களிலே இது தான் மிகப்பெரிய தாக்குதல் என்றும் இது மிகவும் பயங்கரமானது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top