"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
29/4/17

2019 ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பி.ஜே.பி., தலைவர் அமித் ஷா ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
டெல்லி உள்ளாட்சி தேர்தல், 5 மாநில சட்டசபை தேர்தல் என அடுத்தடுத்து வெற்றிகளை குவித்துள்ளது ,அமித்ஷா தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி.
இந்த வெற்றியின் மூலம் குஷியில் உள்ள பா.ஜ.க., அடுத்த இலக்காக வருகின்ற 2019 பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான மாநிலங்களில் மோடியை முன்னிறுத்தி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதனை அடுத்து ,வரவுள்ள 2019 பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பா.ஜ.க. தலைவர் அமித் ஷா ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
அவர் மேற்கொள்ளும் இந்த பயணத்தில் முக்கிய நோக்கம் கடந்த பாராளுமன்றத்தில் பா.ஜ.க. தோல்வி அடைந்த 120 மக்களவை தொகுதிகளில் பா.ஜ.க.வின் வலிமையை கூட்டுவதாகும்.
அவர் தனது முதல் பயணமாக ஜம்மு-காஷ்மீர் செல்கிறார்.அங்கு இரண்டுநாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அங்கு பாரதீய ஜனதா கட்சி ஆளும் கூட்டணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சுற்றுப்பயணத்தை தொடர்ந்து ஒடிசா, லட்சத் தீவு, தெலுங்கானா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு அம்த்ஷா செல்ல உள்ளார். இந்த 4 மாநிலங்களிலும் தலா 15 நாட்கள் தங்குகிறார்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.