"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
29/4/17

சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் 2017-இன் முதல் காலாண்டில் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் முதல் இரு இடங்களை பிடித்துள்ளன. இதைத் தொடர்ந்து ஹூவாய் நிறுவனம் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் ஸ்மார்ட்போன் விநியோகம் 4.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே வெளியான சந்தை வல்லுநர்களின் கணிப்பை விட இது சற்றே அதிகம் ஆகும். 2017-இன் முதல் காலாண்டு நிலவரப்படி சர்வதேச சந்தையில் மொத்தம் 34.7 கோடி ஸ்மார்ட்போன்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆய்வு அறிக்கையின் படி ஸ்மார்ட்போன் சந்தை தொடர்ந்து வளர்ச்சியை நோக்கி செல்வதையே எடுத்துக் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நிலவரப்படி ஸ்மார்ட்போன் வர்த்தகம் சொற்ப அளவுகளில் சரிவை சந்தித்து இருந்தன.  இந்த சரிவு ஸ்மார்ட்போன் வரலாற்றில் முதல் முறை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து இந்த ஆண்டின் முதல் காலாண்டு வளர்ச்சியுடன் துவங்கியிருக்கிறது. இதே நிலை இந்த ஆண்டு முழுக்க தொடரும் என சந்தை வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

எனினும் இந்த ஆய்வின் படி சாம்சங் நிறுவனம் முதல் காலாண்டில் 22.8 சதவிகித புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஆப்பிள் நிறுவனம் 14.9 சதவிகித புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. இதைத் தொடர்ந்து மூன்றாம் இடம் பிடித்துள்ள ஹூவாய் 9.8 சதவிகித புள்ளிகளை பெற்றுள்ளது.

முதல் மூன்று நிறுவனங்களை தொடர்ந்து சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களான ஒப்போ மற்றும் விவோ  நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களை பிடித்துள்ளன. சர்வதேச அளவில் மலிவு விலை ஸ்மார்ட்போன் விற்பனை தொடர்ந்து வளர்ச்சியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.