"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
27/4/17

இந்திய நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீரில் ஃபேஸ்புக் டிவிட்டர் வாட்ஸ் அப் கூகுள் ப்ளஸ் உள்ளிட்ட 16 சமூக வலைத்தளங்களை முடக்க அதிகாரிகள் ஆணையிட்டுள்ளனர். மக்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இந்த ஆணை ஒரு மாத காலத்திற்கு அல்லது அடுத்த ஆணை வரும் வரை தொடரும் என காஷ்மீரின் உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. பிரிட்டிஷ் காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்திய டெலிகிராஃப் சட்டம் 1885 படி இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் இந்த மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல் கலவரத்திற்கு பிறகு தற்போது புதியதாக ஏற்பட்டுள்ள கலவரத்தால் பதற்றங்கள் அதிகரித்துள்ளன. மாணவர்கள் கலவரங்களில் ஈடுபடுவது அரசாங்கத்திற்கு புதிய கவலையை உருவாக்கியுள்ளது. மேலும் போராட்டங்கள் நடைபெறும் என்ற அச்சத்தில் அவ்வப்போது கல்லூரிகளும் மூடப்படுகின்றன.

சீருடை அணிந்த பெண்கள் போலிஸாரின் மீது கல் வீசும் காட்சிகளையும் காண முடிந்தது. இணையதளம் முடக்கம் அரசாங்கத்தால் எடுக்கப்படும் பொதுவான ஒரு நடவடிக்கையாக இருந்தாலும் முதல் முறையாக சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளன. காஷ்மீரில் நிலவும் சூழ்நிலையை தீவிரமாக ஆராய்ந்த பின்னரே சமூக வலைத்தளங்களை முடக்கும் முடிவை எடுத்துள்ளதாக போலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் போலியான பதிவுகள் மூலம் குற்றவாளிகள் இளைஞர்களை தூண்டக்கூடும். அது நீண்ட நாட்கள் நிலவும் ஒரு கவலையாக இருப்பினும் தற்போது சூழல் கட்டுப்பாட்டை மீறி செல்வதால் தற்காலிக தடைதான் கடைசித் தீர்வாக இருந்தது என மூத்த போலிஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.