"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
17/3/17

லட்சக்கணக்கான WhatsApp மற்றும் டெலிகிராம் கணக்குகளை Hackers எனும் ஊடுருவளாளர்கள் முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இணைய பக்கத்தில் பயன்படுத்தப்படும் WhatsApp சேவையில் பாதுகாப்பு அம்சத்தில் இருக்கும் பிழையால் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் தகவல்களை Hackers திருடி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
WhatsApp மட்டுமின்றி டெலிகிராம் செயலியும் இந்த தாக்குதலில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான கணக்குகளின் உரையாடல்கள், தொடர்பு எண்கள் மற்றும் பகிர்ந்துள்ள தரவுகள் மட்டுமின்றி தனிப்பட்ட குறுந்தகவல்களும் குறித்த ஹேக்கர்களால் திருடும் வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.
WhatsApp மற்றும் டெலிகிராம் செயலிகளை பொறுத்தமட்டில் அதன் பாதுகாப்பு அம்சங்களால் அனுப்புனரும் பெறுநரும் மட்டுமே தகவல்களை பார்வையிட முடியும்.

ஆனால் மொபைல் செயலி இல்லாமல் இணையத்தில் பயன்படுத்தும் WhatsApp-ல் பாதுகாப்பு குறைபாடு இருப்பதை தெரிந்துகொண்ட ஹேக்கர்கள் தற்போது லட்சக்கணக்கான பயனாளர்களின் தகவல்களை திருடியுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த தாக்குதலில் 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என டெலிகிராம் தெரிவித்துள்ளது. மேலும் குறித்த இரண்டு செயலி நிறுவனங்களும் உடனடி நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.