"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
9/3/17

கடந்த (01.10.2014) அன்று இரவு நடந்த கூட்டத்தில் ஒரு மனதாக ஹாஜி T.S.E.லியாக்கத் அலி S/o எஹசானல்லா ஜமாத் தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்டர். துணை தலைவராக ஜனாப். A. ஹிதாயத்துல்லா S/o அப்துல் கரீம். செயலாளராக ஜனாப். A. பஷீர் அஹமது S/o அப்துல் முத்தலீப் துணை செயலாளராக ஜனாப். A. ஜாபர் அலி S/o அப்துல் முத்தலீப் பொருளாளராக ஜனாப். A. அப்துல்லா S/o அப்துல் வஹாப் மேலும் கொத்து நாட்டாண்மைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இவர்களின் பதவி காலம் 3 ஆண்டுகள் எனவும் தீர்மானிக்கப்பட்டது. அந்த வகையில் வரும் (01.10.2017) அன்று நமது வி.களத்தூர் ஜமாத் நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைகிறது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக் கிழமை ஜூம்மா தொழுகைக்கு பிறகு T.S.E.லியாக்கத் அலி அவர்கள் தனது தலைவர் பொறுப்பிலிருந்து  விலகுவதாக அறிவித்தார்.

அதன் அடிப்படையில் நேற்று (08.03.17) இரவு நடைப்பெற்ற கூட்டத்தில் T.S.E.லியாக்கத் அலி அவர்கள் தனது தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தற்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில் -

உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக மேலும் தன் பதவில் இருக்கும் போது ஏதேனும் தவறுதலாக யாரேனும் பேசி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்... என்று கூறுவிட்டு பதவியில் இருந்து விடைபெற்றார்.

ஹாஜி ஜனாப் லியாக்கத் அலி அவர்கள் இது வரை தலைவர் பதவியில் இருந்து சிறப்பாக செயலாற்றியதற்கு வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் சார்பாக பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இன்ஷா அல்லாஹ் விரைவில் புதிய ஜமாத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.