காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: சதாம் ஹுசைன் என பெயர் வைத்ததால் இந்தியருக்கு ஏற்பட்ட துயரம்..!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
பத்து ஆண்டுகளுக்கு முன்னரே தூக்கு தண்டனை வழங்கப்பட்ட பின்னரும் இராக்கின் மறைந்த முன்னாள் அதிபர் சதாம் ஹுசைன் இந்தியர் ஒருவரின் வாழ்க்கைய...
பத்து ஆண்டுகளுக்கு முன்னரே தூக்கு தண்டனை வழங்கப்பட்ட பின்னரும் இராக்கின் மறைந்த முன்னாள் அதிபர் சதாம் ஹுசைன் இந்தியர் ஒருவரின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார்.

25 ஆண்டுகளுக்கு முன்னால் இராக்கின் சர்வாதிகாரியாக இருந்த சதாம் ஹுசைனின் பெயரை தனக்கு சூட்டிய அவருடைய தாத்தாவை இந்தியாவை சோந்த இந்த கடல் பொறியியலாளர் குறை சொல்ல விரும்பவில்லை.ஆனால் தன்னுடைய பெயர் ஹுசைன் என்று உச்சரிக்கப்படாமல் ஹுசேன் என்று சற்றே மாறுபட்டு ஒலித்தாலும் சுமார் 40 முறை ஒரு வேலை மறுக்கப்பட்ட பின்னர் பணி வழங்குவோர் தனக்கு வேலை வழங்க விரும்பவில்லை என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளார்.

எனவே சதாம் ஹூசேன் என்ற தன்னுடைய பெயரை சாஜிட் என்று மாற்றி கொள்ள நீதிமன்ற படியேறினார். ஆனால் அந்த அதிகார வர்க்கத்தின் சக்கரங்கள் மிகவும் மெதுவாக சுற்றுவதைப் போலவே அவருடைய வேலை தேடும் படலமும் அமைந்துவிட்டது. இதுபோன்றவற்றிற்கு இந்தியாவிலுள்ள பல கதவுகள் ஒருபோதும் திறக்காமல் போயிருக்கலாம்.

பல இடங்களில் புருவங்களை உயர்த்தச் செய்திருக்கிறது. பிற இடங்களில் அசட்டுச் சிரிப்பைத்தான் பதிலாக தந்துள்ளது.ஆனால் சதாம் ஹுசேன் என்கிற பெயர் கவனிக்கப்படமால் போகப் போவதில்லை என்பதை மட்டும் இந்த வாழ்க்கை சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது. பல்கலைக்கழக பட்டம் தமிழ்நாடு நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் பட்டம் வென்ற இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஜார்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூரை சேந்த சதாம் ஹூசேன் இந்த சிக்கலை உணர்ந்துள்ளார்.

எனக்கு வேலை கொடுக்க மக்கள் அச்சப்படுகின்றனர் சாஜிட் இவர் கல்லூரியில் நன்றாகவே படித்தார். இவரது சக மாணவர்கள் ஏற்கெனவே வேலைகளை பெற்றுள்ள நிலையில் கப்பல் நிறுவனங்கள் இருக்கு வேலை வழங்க முன்வரவில்லை. எனக்கு வேலை கொடுக்க மக்கள் அச்சப்படுகின்றனர் என்று சாஜித் என்று பெயர் மாற்றி கொண்ட சதாம் ஹூசேன் தெரிவித்ததாக இந்துஸ்தான் டைம்ஸ் மேற்கோள் காட்டியுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top