"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
18/3/17

டெங்கு நுளம்பின் தாக்கம் காரணமான இலங்கையின் பல பாகங்களிலும் டெங்கு காய்சல் ஏற்பட்டு மரணங்கள் சம்பவித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் டெங்குவை கட்டுப்படுத்த சுற்றுச் சூழல் தூய்மை தொடர்பாக விளிப்புணர்வுகள் நடைபெற்று வருகின்றன.

சுற்றுச் சூழலை தூய்மையாக வைத்திருத்தல் டெங்கு நோய் பரவாமல் இருப்பதற்கு முக்கிய காரணியாக இருந்தாலும் சூழல் அடிக்கடி மாசடையாமல் இருக்கும் வகையிலான நிரந்தர தீர்வுகளையே நாம் முன்னெடுக்க வேண்டும்.தவளைகள் எண்ணிக்கை  குறைந்ததால் கொசு மற்றும் நுளம்புகள் கட்டுக்கடங்காமல் பெருகி டெங்கு உள்ளிட்ட நோய்கள்  வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல்  ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

நுளம்புகளினால் பரவும் டெங்கு நோய் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகின்றன. இதில் டெங்கு காய்ச்சலுக்கு ஏராளமானவர்கள் பலியாகிவிட்டனர். பெரியவர்கள் மாணவர்கள் பெண்கள் குழந்தைகள் என்ற பாகுபாடு இல்லாமல் டெங்கு பரவி வருகிறது.இந்தளவு டெங்கு பரவுவதற்கு காரணம் ஏடிஸ் ஏஜிப்டி ரக நுளம்புக் கொசுக்கள் கட்டுக்கடங்காமல் பெருகியதுதான். இந்த நிலையில் ஆசிய டைகர் எனப்படும் புதிய ரக நுளம்புகளும் டெங்குவை பரப்புவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏடிஸ் ஏஜிப்டி ரக நுழம்புகள் வீட்டுக்குள் தேங்கி இருக்கும் தண்ணீரில் உருவாகும். ஆனால் ஆசிய டைகர் ரக நுளம்புகள் திறந்த வெளியில் தேங்கி இருக்கும் தண்ணீரில் முட்டையிட்டு பெருகுகிறது.இதே நேரம் நுளம்புகள் அதிகமாக உற்பத்தி ஆவதற்கு  காரணம் தவளைகள் எண்ணிக்கை  கணிசமாக குறைந்ததுதான்  என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் நுளம்புக் கொசுக்கள் அதிகமாக பெருகிவருகிறது. தவளைகள் அதிகமாக இருந்தால்  தண்ணீரில் மிதக்கும் நுளம்பு மற்றும் கொசுகளின் லாவாக்களை அவை  சாப்பிட்டுவிடும். டெங்கு தாக்கம் தொடர்பில் அண்மையில் இந்தியாவின் டெல்லியில் நடைபெற்ற ஆய்வில் இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் தவளைகளே இல்லை என்று தெரியவந்துள்ளது.

இதனால் தவளைகளை காப்பாற்ற வேண்டும் என்று இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதே போல் தற்போது இலங்கையிலும் டெங்கு வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் டெங்குவின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்கு தவளைகளை வளர்த்து பாதுகாப்பது மிகவும் பயன்தரும். அரச தரப்பு இதற்கு உரிய தீர்வுகளை எட்ட வேண்டும்.இஸ்லாத்தை உண்மைப்படுத்திய டெங்கு பற்றிய ஆய்வுடெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்கு தவளை வளர்ப்பு மிக முக்கியமானது என்று டெல்லியை சேர்ந்த ஆய்வாளர்கள் தமது முடிவை வெளியிட்டுள்ளார்கள்.

1400 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்களின் நன்மை கருதி தவளையை அழிப்பதை இஸ்லாம் தடை செய்து விட்டது. நபி (ஸல்) அவர்கள்  தவளையை கொல்வதை தடைசெய்தார்கள்.நூல் : தாரமீ (1914)நபிகள் நாயகம் (ஸல்)  அவர்கள் தவளைகளை கொல்வதை  தடை செய்துள்ளார்கள் என்று  மேற்கண்ட ஆதாரப்பூர்வமான  செய்தி தெளிவுபடுத்துகின்றது.தவளைகளால் எப்படிப்பட்ட நன்மைகள் விளைகின்றன என்பதை அன்றைய கால மக்கள் அறிந்திருக்கவில்லை.

ஆனால் தற்போது நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது. இஸ்லாம் இறைவனின் மார்க்கம்தான் என்பதை மேற்கண்ட ஆய்வு முடிவுகள் உண்மைப்படுத்துகின்றன. அப்படியானால் தவளைகளின்  காரணமாக ஏற்படும் நன்மைகளை கருத்தில் கொண்டுதான் அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் தவளைகளைக்  கொல்ல வேண்டாம் என்ற கட்டளையை பிறப்பித்துள்ளார்கள்.
-ஆன்லைன் பி.ஜெ

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.