"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
28/3/17

அமெரிக்காவில் 'அல்லாஹ்' எனப் பெயரிடப்பட்ட குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்க மறுத்துள்ள அதிகாரிகளை எதிர்த்து பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள ஜோர்ஜியா மாகாணத்தில் Elizabeth Handy மற்றும் Bilal Walk என்ற பெற்றோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 22 மாதக் குழந்தை ஒன்று உள்ளது. சமீபத்தில் இந்தக் குழந்தைக்கு ZalyKha Graceful Lorraina Allah எனப் பெயர் சூட்டினர்.

ஆனால், இந்தக் குழந்தையின் பெயரின் இறுதியில் 'அல்லாஹ்' என்ற பெயர் சேர்க்கப்பட்டுள்ளதால் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்க அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

'குழந்தைக்கு தந்தை அல்லது தாயின் பெயரை இறுதியில் சேர்க்கலாம். ஆனால், அல்லாஹ் என்ற பெயர் அரபி மொழியில் உள்ள வார்த்தை.
இதை பயன்படுத்துவது ஜோர்ஜியா மாகாண சட்டவிதிகளுக்கு எதிரானது' என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் கருத்தை பெற்றோர் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

'அல்லாஹ் என்ற பெயர் புனிதமானது. இதை எங்களுடைய குழந்தைக்கு சூட்டுவதற்கு தடை விதிப்பது எங்களுடைய அடிப்படை உரிமைகளை பறிப்பதாக உள்ளது. பெற்றோரின் விருப்பப்படி குழந்தைக்கு பெயர் சூட்டுவது கூட குற்றமா?' எனப் பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை காக்கும் அமைப்பு ஒன்றின் ஆலோசனைப்படி தற்போது பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.