"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
28/3/17

மகாராஷ்டிராவிலுள்ள பாகிஸ்தானின் முன்னாள் தலைவர் முகமது அலி ஜின்னாவின் இல்லம் இடிக்கப்பட வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மங்கள் பிரபாத் லோதா என்பவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து பேசிய மங்கள் பிரபாத், ”இதற்காக கடந்த 15 வருடங்களாக நான் போராடி வருகிறேன். இந்த விவகாரம் குறித்து இரண்டு முறை சட்டப்பேரவையில் பேசியுள்ளேன். எதிரியின் சொத்தான ஜின்னாவின் இல்லத்தை இந்திய அரசு கையகப்படுத்த வேண்டும்; அதனை மாநில அரசான மகாராஷ்டிரா அரசிடம் ஒப்படைக்க வேண்டும். மாநில அரசு ஜின்னா வீட்டை அழித்துவிட்டு மகாராஷ்டிராவின் பெருமையை எடுத்துரைக்கும் வகையிலான கலாச்சார மையத்தை அங்கு நிறுவ வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய பாணியில் கட்டமைக்கப்பட்டுள்ள ஜின்னாவின் இல்லம் 1936ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது பாகிஸ்தான் உருவாவதற்கு முன்பு கட்டமைக்கப்பட்ட கட்டடமாகும். தற்போது ஜின்னாவின் இல்லம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உடைமைகளின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.