"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
22/3/17

பொதுவாக எல்லா வேலையிலும் ஒரு கஷ்டம் இருக்கும் ஆனால் கஷ்டத்தோடு சேர்த்து சங்கடமும் உள்ள வேலைதான் இந்த ஹவுஸ் டிரைவர் வேலை

1- அவர்களுக்கான சாப்பாட்டு நேரத்தை அவர்கள் தீர்மானிக்க முடியாது. அதை அவர்கள் வீட்டு முதலாளிதான் தீர்மானிக்க வேண்டும் .

2- கவலையை மறந்து நிம்மதியாக தூங்க முடியாது எந்த நேரத்தில் முதலாளி கூப்பிட்டாலும் செல்ல வேண்டும் .

3- ரம்ஜானும், பக்ரீத்தும் வரும் போது நம்ம எல்லாம் நம்ம நண்பர்கள் ரூம்ல போய் பல விதமான சாப்பாடு சாப்பிட்டு, அங்க அரட்டை அடுச்சு அன்றைய தினத்தை கழிப்போம் ஆனால் அவர்களுக்கு அன்றைய தினம் தான் அதிக வேலை இருக்கும்.

4- அவர்களுக்காக குடுக்கப்பட்ட படுக்கை அறையின் அளவோ மிகச்சிறியது. அதற்குள்ளே கிச்சனும், பாத்ரூமும், அடங்கிவிடும் 3 பேர் சேர்ந்து உக்காந்து சாப்பிட கூட முடியாது .

5- ஊரில் எந்த பிரச்சினை இருந்தாலும் அவர்களுக்கான விடுமுறை மாதம் இங்கு மதரசா (பள்ளிகூடங்கள் ) விடுமுறை விடும் மாதங்கள் மட்டுமே .

6- நமக்கு எதுவும் மனக்கஷ்டம் வந்தால் நமக்கு அதை உடனே மற்றவர்களிடம் பறிமாற சந்தர்ப்பம் உண்டு. ஆனால் அவர்கள் சங்கடம் வந்தாலும், சந்தோஷம் வந்தாலும் தானே சிரித்து, தானே சங்கடபட வேண்டும்.

7-அவர்களுக்கு கிடைக்கும் அந்த 2 மாத விடுமுறை கொண்டு குடும்பத்தாரின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும்.

8-எவ்வளவு தான் பட்ஜெட் போட்டு பணத்த சேமிச்சு வச்சாலும் ஊருக்கு போகும் போது நண்பர்கள் கிட்ட கடன் வாங்கிட்டு போறது .

9-25 வயசுல வேலைக்கு வந்து தனது ஆயுளை (50வயசு வரை) கழிப்பவர்

10-அவர்கள் ஓட்டும் கார்களின் நிறங்களும், உருவங்களும் மாறிக்கொண்டே இருக்கும் ...ஆனால் பலரின் வாழ்க்கைத்தரம் மாறுவதே இல்லை .

இன்னும் பல......


                                               "அவர்களுக்கு எனது சல்யூட்”

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.