"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
26/3/17

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றது முதல் அவரது நிர்வாகம் பல்வேறு அதிரடி உத்தரவுகளை தொடர்ந்து பிறப்பித்து வருகிறது.
அந்த வகையில் இப்போது உலகமெங்கும் உள்ள தனது தூதரக, துணைத்தூதரக அதிகாரிகளுக்கு ஒரு அதிரடி உத்தரவை நேற்று பிறப்பித்துள்ளது.
அமெரிக்க பயணத்துக்காக எந்தநாட்டவர்களும் விசா கேட்டு விண்ணப்பித்தாலும், அது சுற்றுலா விசாவாக இருந்தாலும் சரி, தொழில் ரீதியிலான விசாவாக இருந்தாலும் சரி, விசா வழங்குவதில் தீவிர கெடுபிடிகளைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக விசாவிற்கு விண்ணப்பம் செய்பவர் தனது 15 ஆண்டு சரித்திரத்தை சொல்ல வேண்டும். அதாவது, 15 ஆண்டுகளாக அவர் எங்கே குடியிருந்தார், என்ன வேலை பார்த்தார், இறுதி 5 ஆண்டுகளில் பயன்படுத்தி வந்த தொலைபேசி எண்கள் என்ன, இமெயில் முகவரி என்ன, சமூக வலைத்தள கணக்குகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தூதரக அதிகாரிகள் மூலம் பெறப்பட்டு தீவிர பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
எந்த விதத்திலும் வன்முறைகள், குற்றச்செயல்கள், பயங்கரவாத செயல்கள் செய்கிறவர்கள், அவற்றுக்கு ஆதரவு அளிப்பவர்கள் அமெரிக்காவினுள் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக இந்த கெடுபிடிகளை பின்பற்றுமாறு தூதரக அதிகாரிகளுக்கு அமெரிக்க அரசு கூறி உள்ளது.
விண்ணப்பதாரர்களிடம் இன்னும் கூடுதல் கேள்விகள் எழுப்புமாறும் தூதரக அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
விசா அதிகாரிகள் தினந்தோறும் விசா வழங்குவதற்கு நேர்முகத்தேர்வு நடத்த வேண்டிய நபர்களின் எண்ணிக்கையையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கெடுபிடிகள் காரணமாக இனிமேல் அமெரிக்க விசா பெறுவது எளிதான ஒன்றாக இருக்காது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.