Mohamed Farook Mohamed Farook Author
Title: பாகிஸ்தானில் இந்து திருமண மசோதா நிறைவேற்றம்
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இந்து திருமண மசோதா  ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தானில் இந்து பெண்கள் மத மாற்றம் செய்ய...
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இந்து திருமண மசோதா  ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
பாகிஸ்தானில் இந்து பெண்கள் மத மாற்றம் செய்யப்படுவதாக நீண்ட காலமாக புகார் கூறப்பட்டு வந்தது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண இந்து திருமண மசோதா வரையறுக்கப்பட்டது. 

இந்த மசோதாவுக்கு பாகிஸ்தான் நாடாளுமன்ற கீழவை கடந்த 2016 செப்டம்பரில் ஒப்புதல் அளித்தது.
இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரியில் சில திருத்தங்களுடன் மேலவை ஒப்புதல் அளித்தது. திருத்தப்பட்ட இந்து திருமண மசோதா கீழ வையில் மீண்டும் தாக்கல் செய்யப் பட்டது. 

இந்த மசோதா கடந்த  வாரம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதிபர் மெமூன் ஹுசை னின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பப்பட்டுள்ளது. அவர் கையெழுத்திட்டதும் இந்து திருமண சட்டம் அமலுக்கு வரும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top