"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
23/3/17

முற்போக்கு சிந்தனை கொள்ளும் பெண்கள் பெரும்பாலும் தனிமைப்படுவதே இயல்பாகி விடுகிறது.தமது தனிமையை மறைக்க சில புதுமையை வெளிக்கொணரும் திறமையை பெற்று விடுகிறார்கள்.


ஆண்களை போல பெண்களுக்கும் சமவுரிமை உண்டு என்னும் ஆயுதத்தை நம்பி பல்வேறு ஒவ்வாமை கருத்தை விவாதப் பொருளாக்கி வருகின்றனர்.
அதில் ஒன்று ஆடை கலாச்சாரம்.பெண்களுக்கு மட்டும் பர்தா என்னும் ஆடை கட்டுப்பாடு விதிக்கும் ஆண்வர்க்கம் தங்களுக்கு மட்டும் அதில் விலக்களிப்பது ஏன்?என்றெல்லாம் பிதற்றி வருகின்றனர்.
அரை, குறை ஆடைகளால் தான் பாலியல் வன்புணர்வு நடைபெறுமென்றால்… புர்கா அணிந்து தன்னை மறைத்து வாழும் சவூதி போன்ற நாடுகளில் பாலியல் வன்புணர்வே நடைபெறுவதில்லையா? என்ற கேள்வியை முன்வைக்கின்றனர்.
அரபு நாடுகளின் மீதான குற்றச்சாட்டை முன்வைத்து ஆடை சுதந்திரம் கேட்கும் பெண்கள் அங்கே நடைபெறுவதாக சொல்லும் பாலியல் வன்புணர்வு தொடர்பான ஆதாரங்களையும் குறிப்பிட வேண்டும்.
‘ஆடை கட்டுப்பாடு பெண்ணியத்தை காக்கும் என்று நாம் சொன்னால் நமக்கு பெயர் ஆணாதிக்க திமிர் பிடித்தவனாம்’.
தன் கவர்ச்சியை வெளிக்காட்ட துடிக்கும் பெண்ணுக்கு ஆடை கட்டுப்பாடு தேவையில்லையே? சினிமாக்களில் நடிக்கும் சில பெண்களின் அரை, குறை ஆடை கொண்டே அவர்களை கவர்ச்சி புயல், கவர்ச்சிக்கன்னி என்றெல்லாம் அடைமொழி கொண்டு அழைக்கின்றனர்.
பெண்ணின் மார்பிலே தான் அவளது கவர்ச்சி முழுமை பெறுகிறது என்ற நம்பிக்கையில் தானே இயற்கையில் மார்பு சிறுத்தவர்கள் கூட செயற்கையாய் தன்மார்பை பெரிதாக்க துடிக்கின்றனர்.
அத்தகைய மார்பை போதிய ஆடை கொண்டு முழுமையாய் மூடி வாழுங்கள் என்று நாம் சொன்னால்… நமக்கு பெயர் ஆணாதிக்க திமிர் பிடித்தவனாம்.
பர்தா வேண்டாமென்று விரும்பும் பெண்களை யாரும் கட்டாயப்படுத்துவதில்லை.அதற்காக டூ பீஸ் ஆடையில் சுற்றி தெரிவதை யாரும் விரும்புவதுமில்லை.
பர்தாவுக்கு எதிரான வன்ம பிரச்சாரத்தை வைத்து தன்னை முற்போக்கு வாதியாக அடையாளப்படுத்த துடிப்பவர்கள் கலாச்சார சீர்கேடர்களே....
- (கீழை ஜஹாங்கீர் அரூஸி)

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.