காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: அமீரக போக்குவரத்து சட்டங்களில் புதிய மாறுதல்கள் !
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
அமீரக தேசிய போக்குவரத்து சபை தற்போதுள்ள சாலை விதிகளின் சில வற்றில் முக்கிய மாறுதல்களை செய்துள்ளது. அதன்படி, 1. 4 வயதுக்குட்பட்ட குழந்தை...
அமீரக தேசிய போக்குவரத்து சபை தற்போதுள்ள சாலை விதிகளின் சில வற்றில் முக்கிய மாறுதல்களை செய்துள்ளது. அதன்படி,

1. 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வாகனங்களில் அவர்களுக்குரிய பிரத்தியேக இருக்கைகளிலேயே அமர வைக்க வேண்டும்.

2. 145 செ.மீ உயரமுள்ள குறைந்தபட்சம் 10 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட குழந்தைகள் மட்டுமே காரின் முன்னிருக்கையில் அனுமதிக்கப்படுவர். (முன்பு 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளை முன்னிருக்கையில் அமர வைத்தால் 400 திர்ஹம் மற்றும் 4 கரும்புள்ளிகள் அபராதமாக விதிக்கப்பட்டன)

3. சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச்சென்றால் தற்போது 3000 திர்ஹம் அபராதம், 24 கரும்புள்ளிகள் மற்றும் 1 மாதத்திற்கு வாகனம் முடக்கப்படும் என கடுமையாக்கப்பட்டுள்ளது. (முன்பு 200 திர்ஹம், 4 கரும்புள்ளிகள் மற்றும் 7 நாட்கள் வாகன முடக்கம் மட்டுமே தண்டனையாக வழங்கப்பட்டது)

4. முன்னிருக்கையில் அமர்ந்துள்ள டிரைவரைப் போலவே முன்னிருக்கை பயணியும் பாதுகாப்புப் பட்டியை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். தற்போதுள்ள நடைமுறைப்படி 400 திர்ஹம் அபராத்துடன் 4 கரும்புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top