காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: பொது மக்களே எச்சரிக்கை..! விஷத்தன்மை கொண்ட அரிசிகள் விற்பனை
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
அரிசி ஆலை உரிமையாளர்கள், கொள்வனவு செய்யும் அரிசியை குறைந்தது ஐந்து ஆண்டுகள் பயன்படுத்துவதற்காகவும், பாதுகாப்பதற்காகவும் அதிக விஷத்தன்மை...
அரிசி ஆலை உரிமையாளர்கள், கொள்வனவு செய்யும் அரிசியை குறைந்தது ஐந்து ஆண்டுகள் பயன்படுத்துவதற்காகவும், பாதுகாப்பதற்காகவும் அதிக விஷத்தன்மையுள்ள இரசாயனங்களை பயன்படுத்துகின்றனர்.

இதனால், குறித்த அரிசியை கொள்வனவு செய்யும் பொது மக்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்படுகின்றனர் என பொலன்னறுவை சிறுநீரக நோய் தடுப்பு பிரிவு வைத்தியர் மாலின் மெத்சூரிய தெரிவித்துள்ளார்.
மாவட்ட விவசாய குழு எச்சரிக்கை கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே வைத்தியர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மாவட்டத்தில் சிறுநீரக நோய் தடுப்பு திட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த வைத்தியர்,
ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 100 புதிய சிறுநீரக நோயாளிகள் கண்டறிப்படுகின்றனர். சிறுநீரக நோயால் பாதிக்கப்படுபவர்களில், 10 சதவீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் என்றும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுநீரக நோய் தொடர்பில், சிறுநீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போதே சிலரின் குருதி மாதிரிகளில் அல்பியூமின் கண்டுப்பிடிக்கப்பட்டமையால் நோய் உறுத்தியானது என்றும் வைத்தியர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் உணவு பொருட்களை பாதுகாப்பதற்காக அதிக விஷத்தன்மையுள்ள இரசாயனங்கள் பயன்படுத்திவரும் நபர்களை கைது செய்வது தொடர்பிலும், இந்த நிலையை நிலைமையை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வைத்தியர் மாலின் மெத்சூரிய கூறியுள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top