"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
10/3/17

 அபுதாபியில் குறிப்பாக முஸஃபா இன்டஸ்ட்ரியல் ஏரியா பகுதியில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தங்குமிடங்கள் தரமற்ற முறையிலும், சுகாதார சீர்கேடுகளாலும், அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் படுக்கைகளுடனும் கேம்புகள் காணப்பட்டால்; அவர்களுக்கு இத்தகைய தங்குமிடங்களை வழங்கிய நிறுவனங்களுக்கு சுமார் 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அபுதாபி மாநகராட்சி எச்சரித்துள்ளது.

மேலும், எதிர்வரும் ஏப்ரல் மாதம்6 ஆம் தேதிக்குள் இத்தகைய குறைகள் அனைத்தையும் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற காலக்கெடுவையும் அறிவித்துள்ளது.

அபுதாபி மாநகராட்சி வரையறுத்துள்ளபடி சுற்றுச்சூழல் (Environment), சுகாதாரம் (Health) மற்றும் பாதுகாப்பு (Safety) எனப்படும் EHS அம்சங்களையும் பிரதானமாக ஒவ்வொரு தங்குமிடங்களும் கொண்டிருக்க வேண்டும் இல்லையேல்அத்தகைய கட்டிடங்களை புணரமைப்பதற்கான பணிகளை உடனே துவங்க வேண்டும் என கட்டிட உரிமையாளர்கள் (Property Owners) மற்றும் இத்தகைய சொத்துக்களில் முதலீடுகள் (Investors) செய்துள்ள நிறுவனங்கள் இதற்கான முன்னெடுப்புக்களை துவங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அபுதாபி தீவு, பனியாஸ், வத்பா, ஷம்கா உள்ளிட்ட பல பகுதிகளிலும் கடந்த டிசம்பரில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளின் போது, பல தொழிலாளர்கள் தரையில் உறங்கியதும், இன்னும் சிலர் இரண்டடுக்கு மூன்றடுக்கு கட்டில்களில் உறங்கியதும், பலர் தங்களுடைய சமையல் பாத்திரங்களை தங்களின் படுக்கைகளுக்குள்ளேயே வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டன.

இதற்காக சுமார் 14 நிறுவனங்கள் மீது 3.5 லட்சம் திர்ஹங்கள் வரை அபராதம் விதிக்கப்பட்டன.அதேபோல் 2016 அக்டோபரில் சஹாமா மற்றும் அபுதாபியின் புறநகர் பகுதிகளில் உள்ள நிரந்தர மற்றும் தற்காலிக குடியிருப்புக்களில் சோதனைகள் நடத்தப்பட்டு சுமார் 8 நிறுவனங்களுக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டன.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.