vkrnajur vkrnajur Author
Title: குழந்தை பெற்றால் ஆயுட்காலம் அதிகரிக்கும்! - புதிய ஆய்வில் தகவல்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
குழந்தை பெற்றவர்கள், பெறாதவர்களை விட அதிக காலம் வாழ்கிறார்கள் என்று ஸ்வீடனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.  சுமார் 15...
குழந்தை பெற்றவர்கள், பெறாதவர்களை விட அதிக காலம் வாழ்கிறார்கள் என்று ஸ்வீடனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. 


சுமார் 15 லட்சம், ஆண்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கையை ஆராய்ந்த இந்த ஆய்வு, குறைந்தது ஒரே ஒரு குழந்தையையாவது பெற்றவர்கள், குழந்தைகள் ஏதும் பெறாதவர்களைக் காட்டிலும், குறைவான இறப்பு ஆபத்தையே எதிர்கொள்கிறார்கள் என்று முடிவுக்கு வந்தது. 



இந்த ஆய்வில் 1911-லிருந்து 1925 வரையிலான காலகட்டத்தில் பிறந்தவர்களை விஞ்ஞானிகள் பரிசோதித்தனர். 



குழந்தை பெற்றவர்களுக்கும், பெறாதவர்களுக்கும், ஆயுட்கால எதிர்பார்ப்பில் உள்ள இடைவெளி என்பது , அவர்களது 60வது வயதில், ஆண்களுக்கு இரண்டு ஆண்டுகளாகவும், பெண்களுக்கு ஒன்றரை ஆண்டுகளாகவும் இருக்கிறது என்று அந்த ஆய்வு கண்டறிந்தது. 



பெற்றோர்கள் தங்களது முதுமைக்காலத்தில், குழந்தைகளிடம் இருந்து சமூக மற்றும் நிதி ஆதரவைப் பெறுவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று இந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top