Mohammed Farook Mohammed Farook Author
Title: இஸ்லாமிய விளையாட்டு வீராங்கனைகளுக்கு ஹிஜாப் ஆடை! - நைக் நிறுவனம் அறிமுகம்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
 முஸ்லிம் விளையாட்டு வீராங்கனைக்களுக்கான ஹிஜாப் ஆடையை நைக் நிறுவனம் அடுத்த வருடம் அறிமுகப்படுத்தவுள்ளது.விளையாட்டு வீராங்கனைகளுக்கான இந்த...
 முஸ்லிம் விளையாட்டு வீராங்கனைக்களுக்கான ஹிஜாப் ஆடையை நைக் நிறுவனம் அடுத்த வருடம் அறிமுகப்படுத்தவுள்ளது.விளையாட்டு வீராங்கனைகளுக்கான இந்த ஹிஜாப் ஆடை, பாரம்பரிய இஸ்லாமிய நடைமுறையின்படி தலைமூடிய வடிவில் உருவாக்கப்பட்டதுடன் விளையாட்டு வீராங்கனைகளுக்கு சவுகரியமான வடிவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.இது குறித்து நைக் தரப்பில்,"குறைந்த அளவிலான எடையுடன் இந்த ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடைகள் அடுத்த வருடம் சந்தைகளிலுள்ள அலமாரியில் அலங்கரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஹிஜாப் தொடர்பாக பல்வேறு முஸ்லிம் விளையாட்டு வீராங்கனைகளிடம் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் நைக் நிறுவனம் கூறியுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top