"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
18/3/17

உம்முஸலமா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள்:
''நோயாளியிடமோ அல்லது இறந்தவரிடமோ நீங்கள் இருக்க நேரிட்டால், நல்லதைக் கூறுங்கள். நீங்கள் சொல்லக் கூடியவற்றிற்கு வானவர்கள் 'ஆமின்' கூறுகிறார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(என் கணவர்) அபூஸலமா ரளியல்லாஹு அன்ஹு இறந்தபோது, நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ''இறைத்தூதர் அவர்களே! அபூஸலமா இறந்து விட்டார்கள்'' என்று கூறினேன்.
''அல்லாஹு மஹ்ஃபிர்லீ வலஹு, வஅஹ்கிப்னீ மின்ஹு உக்பன் ஹஸனதன் (இறைவனே! என்னையும், அவரையும் மன்னிப்பாயாக, அவரை விட சிறந்த துணையை எனக்கு ஏற்படுத்துவாயாக)'' என்று நீ கூறு! என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
அதை நான் கூறினேன். அவரை விட சிறந்தவர்களான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எனக்கு அல்லாஹ் துணையாக்கினான். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 920)

உம்முஸலமா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள்:
''ஒரு மனிதனுக்கு சோதனை ஏற்பட்டதும் ''இன்னாலில்லாஹி வஇன்னா இலய்ஹி ராஜிஊன். அல்லாஹும்ம அஜிர்னீ ஃபீமுஸீபத்தீ வக்லிஃப்லீ கய்ரன் மின்ஹா (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்குரியவர்கள். நாம் அவன் பக்கமே மீளுபவர்களாக உள்ளோம். இறைவனே! என் சோதனையில் எனக்கு கூலியைத் தருவாயாக! அதைவிட சிறந்ததை எனக்குப் பகரமாக்குவாயாக) என்று கூறினால், அவருக்கு அல்லாஹ் அவரின் சோதனைக்கு கூலியைத் தந்து, அதைவிட சிறந்ததை அவருக்கு பகரமாக்காமல் இருப்பதில்லை என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

(என் கணவர்) அபூஸலமா ரளியல்லாஹு அன்ஹு இறந்தபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு கட்டளையிட்டபடிக் கூறினேன். அவரையும் விட சிறந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையே எனக்கு கணவராக ஆக்கினான். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 921)

அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
''ஓர் அடியானின் குழந்தை இறந்துவிட்டால், வானவர்களிடம் அல்லாஹ், ''என் அடியானின் குழந்தை (உயிரை) கைப்பற்றினீர்களா?'' என்று கேட்பான். ''ஆம்'' என அவர்கள் கூறுவார்கள்.
''என் அடியானின் இதயத்தைக் கைப்பற்றினீர்களா? என்று அல்லாஹ் கேட்பான். ''ஆம்'' என அவர்கள் கூறுவார்கள். ''என் அடியான் என்ன கூறினான்? என்று கேட்பான். '

'உன்னைப் புகழ்ந்தான். ''இன்னாலில்லாஹி வஇன்னா இலய்ஹி ராஜிஊன் எனக் கூறினான்'' என்று வானவர்கள் கூறுவார்கள். ''சொர்க்கத்தில் என் அடியானுக்கு வீடு கட்டுங்கள். அதற்கு ''புகழுக்குரிய வீடு'' என்று பெயரிடுங்கள்!'' என்று அல்லாஹ் கூறுவான். (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 922)

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹுஅறிவிக்கின்றார்கள்:
''ஓர் இறை நம்பிக்கை கொண்ட அடியானின் குழந்தையை இவ்வுலகில் நான் கைப்பற்றி, அவன் அதை பொறுமையாக எடுத்துக் கொண்டால், அவனுக்குக் கூலியாக சொர்க்கத்தைத் தவிர வேறில்லை' என்று அல்லாஹ் கூறியதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரி (ரியாளுஸ்ஸாலிஹீன்: 923)

உஸாமா இப்னு ஸைத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
"நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெண் மக்களில் ஒருவர் (ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா) தன் மகன் இறந்து விட்டதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குச் செய்தி அனுப்பினார். அப்போது வந்தவரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''என் மகளிடம் செல். நிச்சயமாக அல்லாஹ்வுக்கு எடுத்துக் கொள்ளவும், கொடுக்கவும் உரிமை உண்டு என்று அவரிடம் கூறு! அல்லாஹ்விடம் உள்ள ஒவ்வொன்றிற்கும் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. அவர் (என் மகள்) பொறுமையாக இருந்து, நன்மையை நாடும்படி அவருக்கு கட்டளையிடு'' என்று கூறினார்கள். (இது நீண்ட ஹதீஸின் ஒரு பகுதியாகும்). (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 924)

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.