Mohammed Farook Mohammed Farook Author
Title: சவுதி, கத்தார் உள்ளிட்ட 8 நாடுகளிலிருந்து மின்னணு பொருட்களை எடுத்து வர அமெரிக்கா தடை
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
வாஷிங்டன்  - எகிப்து, கத்தார் உள்ளிட்ட 8 நாடுகளிலிருந்து லேப்டாப்கள் உள்ளிட்ட மின்னணு பொருட்களை எடுத்து வர அமெரிக்கா தடை விதித்துள்ளது...
வாஷிங்டன்  - எகிப்து, கத்தார் உள்ளிட்ட 8 நாடுகளிலிருந்து லேப்டாப்கள் உள்ளிட்ட மின்னணு பொருட்களை எடுத்து வர அமெரிக்கா தடை விதித்துள்ளது.

அமெரிக்காவில் நுழைய ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன், சிரியா ஆகிய நாடுகளுக்கு விதிக்கப்பட்ட விசா தடை பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது. இந்த நிலையில், எகிப்து, கத்தார் உள்ளிட்ட 8 நாடுகளிலிருந்து லேப்டாப், கேமரா மற்றும் ஐ-பேடுகளை விமானத்தில் எடுத்து வருவதற்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. மொபைல்கள், மருத்துவ உபகரணங்கள் போன்ற பொருட்களுக்கு இந்த தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

எகிப்து, ஜோர்டான், குவைத், மொராக்கோ, கத்தார், சவுதி அரேபியா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் போன்ற நாடுகளிலிருந்து மேற்சொன்ன பொருட்களை எடுத்து வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் இத்தடை அந்நாட்டில் அமலுக்கு வருகிறது. எனினும், இதற்கான காரணம் என்னவென்பது இதுவரை வெளியாகவில்லை.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top