"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
19/3/17

6 முஸ்லீம் நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு அதிபர் விதித்த தடையை நீக்கிய சுப்ரீம் கோர்டிற்கு எதிராக டிரம்ப் அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின்னர் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில், முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஆறு நாட்டு அகதிகள் அமெரிக்கா வருவதற்கு 120 நாட்கள் தடை விதித்தார். அதே நேரத்தில் அந்த 6 நாட்டு மக்களும் 90 நாட்களுக்கு அமெரிக்காவில் நுழைய தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டார்.
 
தீவிரவாதிகள் அமெரிக்காவில் நுழைவதை தடுக்கும் விதமாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டிரம்ப் விதித்த இந்த பயணத் தடை அமலுக்கு வருவதற்கு முன்பே அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் டிரம்ப் உத்தரவுக்கு தடை விதித்தது. சுப்ரீம் கோர்ட்டின் இத்தகைய தீர்ப்பினால் கடும் அதிருப்தி அடைந்த டிரம்ப், தனது ஆதரவாளர்கள் மத்தியில் நீதித்துறையின் தலையீடு அதிகமாக இருப்பதாக கடுமையாக சாடினார்.

தேசிய நலனுக்காக குடியேற்றங்களுக்கு தற்காலிக தடை விதிக்க இந்த நாட்டின் அரசியல் அமைப்பு சட்டம் அதிபருக்கு அதிகாரம் வழங்கியிருக்கிறது என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில், டிரம்ப் அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் விதித்த தடையை நீக்க வலியுறுத்தி கிரீன்பெல்ட் மாவட்டத்தில் உள்ள மேரிலாண்ட் நீதிமன்றத்தில், வெள்ளை மாளிகையில் செயல்பட்டு வரும் டிரம்பின் நீதித்துறை மேல்முறையீடு செய்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.