"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
17/3/17

மொசூல்  - சிரியாவில் 6 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 1.5 லட்சம் பேரை காணவில்லை என்றும் பிரிட்டன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 6 வருடங்களாக சிரியாவில் உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்நாட்டு அதிபர் பாஷர் அல் ஆசாதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐ.எஸ் தீவிரவாதிகள் அசம்பாவித செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

அவர்களின் பிடியில் சிக்கியுள்ள நகரங்களை மீட்க சிரிய ராணுவம் தொடர்ந்து போராடி வருகிறது. சிரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் ராணுவ வீரர்களும் சிரியாவில் கூட்டுமுயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சிரியாவில் நடைபெற்று வரும் போர் குறித்த ஆய்வு ஒன்றை பிரிட்டன் மனித உரிமை கவுன்சில் அமைப்பு நடத்தியது. அந்த ஆய்வில், கடந்த 6 வருடங்களில் இதுவரை 3,21,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதில் 96,000 பேர் பொதுமக்கள் என்றும்  தெரிவித்துள்ளது. 

மேலும் 1,45,000 பேரை காணவில்லை என்றும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.  சிரிய அரசு சார்பில் நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதல் உள்ளிட்ட பல தாக்குதல்களில் சுமார் 83,500 பேர் உயிரிழந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.