"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
28/3/17

வெளிநாடுகளில் ஓட்டுனர் உரிமம் பெறுவதென்பது மிகக்கடினம் என்பதை அரபு நாடுகளில் லைசென்ஸ் பெற்றவர்கள், பெற முயற்சித்துக் கொண்டுள்ளவர்கள் அறிவர்.


இங்கிலாந்து, சவுத் யார்க்ஷையர், பார்ன்ஸ்லே பகுதியை சேர்ந்தவர் கிருஸ்டியன் ஒயிட்லி எனும் 42 வயதுடைய தனியார் நிறுவன மேலாளர். இவர் 1992 ஆம் ஆண்டு டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளில் 33 முறை தோல்வியடைந்து, சுமார் 10,000 யூரோக்களுக்கு மேல் செலவழித்ததுடன் 14 பேர் வாகன ஒட்டும் பயிற்சியும் அளித்துள்ளனர் என்றாலும் தோல்வி, தோல்வி, தோல்வியே மிஞ்சியது.இடையில் தனக்கு பயிற்சியளித்த ஒருவர் 'இனிமேல் நீ முயற்சிக்காதே, இதுக்கு நீ சரிப்பட்டு வர மாட்டே' எனவும் ஊக்க(?)மளித்துள்ளார், அதிலும் ஒரு பெண் பயிற்சியாளருக்கு இவரை கண்டாலே பிடிக்காதாம், கட்டாயம் பெயில் தானாம்.இப்படியாக, வேதாளம் மீண்டும் மீண்டும் முருங்கை மர ஏறினாலும் விக்கிரமாதித்தனாக நின்று வென்று அசத்தியுள்ளார். அவர் பாஸானதை அவராலேயே நம்ப முடியாவில்லையாம்.... ஷாக் அடித்த பிரமையில் உள்ளாராம்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.