Mohammed Farook Mohammed Farook Author
Title: 2050-ல் உலகிலேயே இந்தியாவில்தான் அதிக இஸ்லாமியர்கள்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
2050-ம் ஆண்டில் உலகில் அதிக இஸ்லாமியர்கள் வாழும் நாடாக இந்தியா இருக்கும் என்று அமெரிக்காவின் 'Pew Research Centre' நடத்திய ஆய்வி...

2050-ம் ஆண்டில் உலகில் அதிக இஸ்லாமியர்கள் வாழும் நாடாக இந்தியா இருக்கும் என்று அமெரிக்காவின் 'Pew Research Centre' நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தற்போது, இந்தோனேசியாதான் உலகிலேயே அதிக இஸ்லாமியர்கள் வாழும் நாடாக இருக்கிறது. மேலும், உலக மக்கள் தொகையில் 23% பேர் இஸ்லாமியர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதாவது 1.6 பில்லியன் இஸ்லாமியர்கள் உலகில் இருக்கிறார்கள். மக்கள் தொகையில் உலகில் தற்போது, கிறிஸ்துவத்துக்கு அடுத்த இடத்தில் உள்ள இஸ்லாம் மக்கள் தொகையில் வேகமாக வளர்ந்து வரும் மதம் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, 2050-ம் ஆண்டில் இந்தியாவில் 300 மில்லியன் இஸ்லாமியர்கள் இருப்பார்களாம். உலக அளவில் 2.8 பில்லியன்களாக இருப்பார்கள் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஐரோப்பாவிலும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஐரோப்பாவில் தற்போது இருப்பதை விட, 2050-ம் ஆண்டில்இஸ்லாமியர்களின் எண்ணிக்கை10% அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

நன்றி - விகடன்

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top