"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
28/2/17

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் ருமானா அகமது என்ற பெண் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அலுவலகத்தில் பணிபுரிந்தார்.இவர் வங்காளதேச வம்சாவளியை சேர்ந்த முஸ்லிம் பெண் ஆவார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஒபாமா அரசு நிர்வாகத்தில் பணிபுரிந்து வந்தார். பணியின் போது தலையில் ‘ஹிஜாப்’ அணிந்து இருப்பார்.
புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு ஈராக், ஈரான், சிரியா உள்ளிட்ட 7 முஸ்லிம் நாடுகளுக்கு ‘விசா’ தடை விதித்தார். இந்த நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்கா உள்ள வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வசித்து வரும் இந்த ஏழு நாட்டை சேர்ந்த மக்களையும் வெளியேற்றும் முடிவில் உள்ளார் டிரம்ப். இந்த நிலையில் ருமானா அகமது திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டார். ‘விசா’ தடை விதித்த 8 நாட்களில் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக ருமானா அகமது தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பதவி ஏற்றவுடன் தனது நிர்வாகத்தில் அவர் பல்வேறு மாற்றங்கள் செய்தார். அது போன்று தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு புதிய தலைவர் மற்றும் உதவியாளர்கள், நியமிக்கப்பட்டனர்.இந்த அடிப்படையில் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பணி நீக்கம் செய்ததன் மூலம் தான் அவமானப்படுத்தப்பட்டதாக ருமானா அகமது தெரிவித்துள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.