Mohammed Farook Mohammed Farook Author
Title: துபாயில் தவணை முறையில் போக்குவரத்து அபராதம் செலுத்த மேலும் ஒரு வசதி !
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
 துபையில் போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்காக 1000திர்ஹத்திற்கு மேல் அபராதங்கள் செலுத்த வேண்டியுள்ளவர்கள் புதிய வசதியின் படி, பர்ஸ்ட் ...
 துபையில் போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்காக 1000திர்ஹத்திற்கு மேல் அபராதங்கள் செலுத்த வேண்டியுள்ளவர்கள் புதிய வசதியின் படி, பர்ஸ்ட் கல்ப் பேங்க் (FGB) கிரடிட் கார்டு மூலம் செலுத்தவதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

வட்டியில் இல்லா தவணைமுறை என்று சொல்லப்பட்டுள்ள இத்திட்டத்தின் வழியாக 3, 6, 9 மற்றும் 12 மாதத் தவணைகளில் பிரித்து அபராதங்களை செலுத்தலாம்.

இதற்கு துபை போலீஸ்ஆப் (Dubai Police App), போலீஸ் இணையதளம் (Police Website) அல்லது சேவை மையத்திற்கு (Service Center) நேராக சென்றோ இவ்வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதேபோன்றதொரு ஒப்பந்த வசதியை கடந்த வருடம் முதல் அபுதாபி கமர்ஷியல் பேங்குடனும் (ADCB), 2014 ஆம் ஆண்டு முதல் எமிரேட்ஸ் என்பிடி பேங்குடனும் (Emirates NBD) துபை போலீஸ் செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்றதொரு வசதியை இம்மாத ஆரம்பத்தில் ஷார்ஜா போலீஸூம் துவங்கி இருப்பது நினைவுகூறத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top